ஜூன் 16 வரை எந்த போனும் வாங்காதீங்க.. 7560mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. வருகிறது புது Redmi போன்.. எந்த மாடல்?
ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் வரும் ஜூன் 16-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிரும். இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்தியாவில் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ35,000 பட்ஜெட்டில் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதேபோல் இந்த போன் அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் வெளியான இந்த போனின் அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி டர்போ 5 அம்சங்கள் (Redmi Turbo 5 specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 8500 அல்ட்ரா (Dimensity 8500 Ultra) சிப்செட் உடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக 6.59-இன்ச் 1.5கே ஒஎல்இடி எல்டிபிஎஸ் (1.5K OLED LTPS) டிஸ்பிளே வசதியுடன் இந்த ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இதன் டிஸ்பிளேவில் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.
அதுவும் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் 50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதியுடன் இந்த புதிய ரெட்மி டர்போ 5 அறிமுகம் செய்யப்படும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அடிப்படையாகக் கொண்டு ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
IP66/IP68/IP69/IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

7560mAh பேட்டரி உடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த ரெட்மி போன் வெளிவரும்.


Click it and Unblock the Notifications