Home
Mobile

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது Redmi 5ஜி போன்.. 7540mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி நிறுவனம் சமீபத்தில் புதிய ரெட்மி டர்போ 5 ( (Redmi Turbo 5) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில் இந்த புதியரெட்மி போன் நாளை (ஜூன் 19) முதல் முறையாக அமேசான் தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இப்போது ரெட்மி டர்போ 5 போனின் விலை, சலுகைகள் மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி டர்போ 5 அம்சங்கள் (Redmi Turbo 5 Specifications): 6.59-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ரெட்மி டர்போ 5 போன் வெளிவந்தது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டால்பி விஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), டிசி டிம்மிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் டைமன்சிட்டி 8500-அல்ட்ரா 4எனம் எஸ்ஒசி (Octa-Core Dimensity 8500-Ultra 4nm SoC) சிப்செட் உடன் புதிய ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் Arm Mail-G720 MC8 GPU கிராபிக்ஸ் கார்டு ஆதரவும் இந்த புதிய ரெட்மி போனில் உள்ளது.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி டர்போ 5 அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் Xiaomi HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 மூலம் ரெட்மி டர்போ 5 போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

50MP Sony IMX882 ப்ரைமரி சென்சார் + 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ்என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த கேமராக்கள் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஆப்டிகல் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Optical Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங், IP69 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட்உடன் ரெட்மி டர்போ 5 போன் வெளியாகி உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 7 802.11 பிஇ, புளூடூத் 6.0, கலிலியோ (Galileo), க்ளோனஸ் (GLONASS), ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

நாளை இந்தியாவில் களமிறங்கும் புது Redmi 5ஜி போன்.. எந்த மாடல்?

7540எம்ஏஎச் பேட்டரி உடன் ரெட்மி டர்போ 5 போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. டர்போ ஒயிட், நிட்ரோ ப்ளூ மற்றும் ஆஸ்பால்ட் பிளாக் ஆகிய 3 கலர்களில் வாங்க இந்த போன் கிடைக்கும்.

ரெட்மி டர்போ 5 விலை
8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 5 மாடலின் விலை ரூ.37,999-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 5 மாடலின் விலை ரூ.40,999-ஆக உள்ளது.
தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Turbo 5 phone will go on sale for first time tomorrow: check price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X