Home
Mobile

மார்க்கெட்டை சுருட்டி பாக்கெட்டுல போடும் விலை.. Redmi-யின் புதிய Turbo Max ஸ்மார்ட்போன்!

ரெட்மி நோட் 15 5ஜி சீரீஸ் (Redmi Note 15 5G Series) ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 6 இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், இம்மாத இறுதியில் ரெட்மி டர்போ 5 சீரீஸ் (Redmi Turbo 5 Series) ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்பதை ரெட்மி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும் இந்த சீரிஸில் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (Redmi Turbo 5 Max) என்கிற புத்தம் புதிய மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.30,000 பட்ஜெட் பிரிவில் ஒரு வலுவான ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Redmi-யின் புதிய Turbo Max ஸ்மார்ட்போன்!

இது குறித்து வெளியான அதிகாரப்பூர்வ டீஸர்கள் ஆனது ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது அதிக செயல்திறன், மேம்பட்ட சகிப்புத்தன்மை மற்றும் அதிக பிரீமியம் அனுபவத்தை மையமாக கொண்ட ஒரு ஸ்டெப்-அப் மாடலாக நிலைநிறுத்தப்படும் என்பதை குறிக்கிறது. அம்சங்கள் முக்கிய அம்சங்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை.

சீனாவில் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் மற்றும் ரெட்மி டர்போ 5 ப்ரோ மேக்ஸ் ஆக அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட்போன்கள் இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் போக்கோ எக்ஸ் 8 சீரிஸ் (POCO X8 Series) ஸ்மார்ட்போன்களாக அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதாவது போக்கோ எக்ஸ்8 சீரில் ஸ்டாண்டர்ட் போக்கோ எக்ஸ்8 மாடல் இருக்காது. மாறாக போக்கோ எக்ஸ்8 மேக்ஸ் (Poco X8 Max) அல்லது போக்கோ எக்ஸ்8 ப்ரோ (Poco X8 Pro) மற்றும் போக்கோ எக்ஸ்8 ப்ரோ மேக்ஸ் (Poco X8 Pro Max) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

ரெட்மி நோட் 15 5ஜி சீரீஸின் கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும்? ரெட்மி நோட் 15 5ஜி (Redmi Note 15 5G) மற்றும் ரெட்மி நோட் 15 5ஜி 108 மாஸ்டர் பிக்சல் எடிஷன் (Redmi Note 15 5G 108 Master Pixel Edition) என்கிற 2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? எக்ஸ் (X) தளம் வழியாக டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் (@yabhishekhd) பகிர்ந்துள்ள விவரங்களின் படி, ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போன் மொத்தம் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ் அறிமுகம் செய்யப்படலாம். பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம்

இதே ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம், முன்னதாக (கடந்த ஆண்டு) வெளியான ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.17,999 க்கு அறிமுகமானது.

ரெட்மி நோட் 15 5ஜி சீரீஸில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? அதிகாரப்பூர்வ டீஸர்களின்படி, ரெட்மி நோட் 15 5ஜி 108 மாட்ஸர் பிக்சல் எடிஷன் 108எம்பி கேமரா கொண்டிருக்கும். சிப்செட்டை பொறுத்தவரை ரெட்மி நோட் 15 5ஜி மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 6 Gen 3 Chipset) உடன் வரும்.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம், இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.77-இன்ச் அளவையும் கொண்டிருக்கலாம். சுவாரசியமாக இந்த டிஸ்பிளே - ஈரமான விரல்களால் கூட எளிமையாக பயன்படுத்த அனுமதிக்கும் ஹைட்ரோ டச் 2.0 அம்சத்தையும் ஆதரிக்கும்.

மேலும் ரெட்மி நோட் 15 ஸ்மார்ட்போனானது தூசி மற்றும் நீர் ஆதாரங்களுக்கு எதிரான பாதுகாப்பிற்காக IP66 மதிப்பீட்டை பெறும். கடைசியாக இந்த ஸ்மார்ட்போன் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,520mAh பேட்டரியை கொண்டிருக்கும். மற்ற பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது, இது சற்றே சிறிய பேட்டரி ஆக தெறிந்தாலும், அதிகாரப்பூர்வ டீஸர்கள் இந்த பேட்டரி 1.6 நாட்கள் நீடிக்கும் என்று கூறுகின்றன

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Turbo 5 Max to Launch this Month Could be Rebranded As Poco X8 Max in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X