Home
Mobile

அடிச்சான் பாரு Redmi.. 9000mAh பேட்டரி.. IP69K ரேட்டிங்.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (Redmi Turbo 5 Max) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ரெட்மி டர்போ 5 மேக்ஸ் அம்சங்கள் (Redmi Turbo 5 Max Specifications): 6.83-இன்ச் 1.5கே ஒஎல்இடி டிஸ்பிளே உடன் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2772 x 1280 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), டால்பி விஷன், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அடிச்சான் பாரு Redmi.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

ஆக்டா கோர் டைமன்சிட்டி 9500 3என்எம் எஸ்ஒசி (Octa-Core Dimensity 9500 3nm SoC) சிப்செட் உடன் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் ஏஆர்எம் மாலி-ஜி925 அல்ட்ரா எம்சி12 ஜிபியு (Arm Mali-G925 MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது.

16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன். மேலும் ஹைப்பர் ஓஎஸ் 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இந்த ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

அடிச்சான் பாரு Redmi.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

50எம்பி மெயின் லைட் ஃப்யூஷன் 600 சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

3டி அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic in-display fingerprint sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யுஎஸ்பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளும் இந்த ரெட்மி ஸ்மார்ட்போனில் உள்ளன.

IP66+IP68+IP69+IP69K தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4இ என்எப்சி, க்ளோனஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

அடிச்சான் பாரு Redmi.. புதிய 5ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?

9000mAh பேட்டரி உடன் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

ரெட்மி டர்போ 5 மேக்ஸ் விலை

  • 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 5 மேக்ஸ் போனின் விலை 2499 yuan (இந்திய மதிப்பில் ரூ.33,040)
  • 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 5 மேக்ஸ் போனின் விலை 2799 yuan (இந்திய மதிப்பில் ரூ.37,005)
  • 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 5 மேக்ஸ் போனின் விலை 2799 yuan(இந்திய மதிப்பில் ரூ.37,005)
  • 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 5 மேக்ஸ் போனின் விலை 3099 yuan(இந்திய மதிப்பில் ரூ.40,970). தற்போது இந்த போன் சீனாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Turbo 5 Max launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X