போட்டான் பாரு ரெட்மி.. OLED டிஸ்பிளே.. 9000mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. 3840Hz PWM டிம்மிங்.. எந்த மாடல்?
ரெட்மி நிறுவனத்தின் பெரிய பேட்டரி கொண்ட மாடலாக அறிமுகம் செய்யப்பட உள்ள ரெட்மி டர்போ 5 மேக்ஸ் (REDMI Turbo 5 Max) ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. எல்டிபிஎஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவில் பட்டையை கிளப்பி இருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப இருக்கிறது. இந்த ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
சீன ஸ்மார்ட்போன் மார்கெட்டில் வருகிற ஜனவரி 29 ஆம் தேதி ரெட்மி டர்போ 5 சீரிஸ் (Redmi Turbo 5 Series) அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதில் ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) மற்றும் ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளன. ஏற்கனவே, பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் பீச்சர்கள் உறுதியாகி ரெட்மி பிரியர்களை தட்டித்தூக்கியது.

இப்போது, டிஸ்பிளே பீச்சர்கள் உறுதி செய்யப்பட்டு மேலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. 6.83 இன்ச் எல்டிபிஎஸ் ஓஎல்இடி (LTPS OLED) டிஸ்பிளே இந்த ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போனில் கிடைக்க உள்ளது. 1.5K ரெசொலூஷன், 3500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 3840Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்க உள்ளது. மேலும், டிசி டிம்மிங் (DC Dimming) கொடுக்கப்பட உள்ளது.
சியோமி கிரீன் மவுன்டெய்ன் ஐ புரொடெக்சன் (Xiaomi Green Mountain Eye Protection) டெக்னாலஜி உள்ளது. 3டி அல்ட்ரா சோனிக் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (3D Ultrasonic Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது. டிசிஎல் எம்10 (TCL M10) டிஸ்பிளே மாடலாக இருக்கிறது. ஆகவே, ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்களுக்கு பக்காவான மாடலாக இந்த ரெட்மி டர்போ 5 மேக்ஸ் இருக்கப் போகிறது.
ரெட்மி டர்போ 5 மேக்ஸ் அம்சங்கள் (REDMI Turbo 5 Max Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் (Octa Core Mediatek Dimensity 9500s) சிப்செட்டை இந்த ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போன் கொடுக்க உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்க உள்ளது. பெரிய 9000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட உள்ளது.
27W ரிவர்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்க இருக்கிறது. ஓம்னிவிஷன் லைட் ஃப்யூசன் 600 (OmniVision Light Fusion 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா மற்றும் செகண்டரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்க இருக்கிறது. IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்க இருக்கிறது.
டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Dual Stereo Speakers) கிடைக்க உள்ளது. இந்த மேக்ஸ் மாடலுடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் டிஸ்பிளே கிடைக்க உள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 8500 (Octa Core Dimensity 8500) சிப்செட்டை கொடுத்துள்ளது. 8000mAh பேட்டரி மற்றும் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது.
ரெட்மி டர்போ 5 மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.33,000 பட்ஜெட்டிலும், ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,000 பட்ஜெட்டிலும் இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் போகோ மாடல்களாக இந்த ரெட்மி டர்போ 5 சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கிறது. ஜனவரி 29ஆம் தேதிக்கு பிறகு அதுகுறித்த விவரங்கள் தெரியவரும்.


Click it and Unblock the Notifications








