Home
Mobile

இதுதான் புது Redmi 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. IP69 ரேட்டிங்.. 100W சார்ஜிங்.. எந்த மாடல்?

ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம். இந்நிலையில் இந்த புதிய ரெட்மி போனின் படங்கள் மற்றும் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது எல்இடி பிளாஸ் உடன் டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இந்த போன் பன்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) உடன் வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இதுதான் புது Redmi 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

ரெட்மி டர்போ 5 அம்சங்கள் (Redmi Turbo 5 specifications): டைமன்சிட்டி 8500 அல்ட்ரா (Dimensity 8500 Ultra) சிப்செட் உடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். பின்பு இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி டூயல் ரியர் கேமராவுடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவும் இதில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.

புதிய ரெட்மி டர்போ 5 போன் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display fingerprint sensor) வசதியுடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் HyperOS 3 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அடிப்படையாகக் கொண்டு ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.

அதுவும் IP68/69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் வெளிவரும். அதேபோல் இந்த போனில் யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), டால்பி அட்மோஸ் (Dolby Atmos) உள்ளிட்ட பல அம்சங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுதான் புது Redmi 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

8000mAh அல்லது 9000mAh பேட்டரி உடன் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் ரெட்மி டர்போ 5 போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும்.

photo credit: Weibo, redmi, Abhishek Yadav

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Turbo 5 Design and Specifications Leaked: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X