ராத்து ராசன் Redmi.. 7540mAh பேட்டரி, 100W சார்ஜிங், IP69K.. ஆபர் விலையில் புது 5G போன் SALE ஆரம்பம்!
ரெட்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக இந்தியாவில் அறிமுகமான ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) மாடலின் விற்பனை இன்று (ஜூன் 19) முதல் தொடங்கியுள்ளது. 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் என்ன? விலை என்ன? விற்பனை சலுகை என்ன? விரிவான அம்சங்கள் என்னென்ன? நம்பி வாங்கலாமா, வேண்டாமா? இதோ விவரங்கள்:
ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவு கொண்ட 1.5கே அமோஎல்இடி டிஸ்பிளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8000 சீரிஸ் சிப்செட்
- 7,540mAh பேட்டரி மற்றும் 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா செட்டப்
- ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே கட்அவுட்டிற்குள் 20 மெகாபிக்சல் செல்பீ கேமரா

ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை சலுகை:
பேஸிக் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.37,999
ஹை-எண்ட் பேஸிக் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் - ரூ.40,999
எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI) பேங்க் மற்றும் ஆக்சிஸ் (Axis) பேங்க் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும்போது ரூ.2,000 வரை தள்ளுபடி கிடைக்கும் என்று ரெட்மி நிறுவனம் அறிவித்துள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன் இன்று (ஜூன் 19) முதல் அமேசான் (Amazon) வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இது Asphalt Black, Nitro Blue மற்றும் Turbo White ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கிறது.
ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 6.59-இன்ச் 1.5கே (1,268 × 2,756 பிக்சல்கள்) 12-பிட் அமோஎல்இடி டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 3500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 68.7 பில்லியன் கலர்ஸ், 2,560Hz இன்ஸ்டன்ட் டச் சாம்ப்ளிங் ரேட், 480Hz டச் சாம்ப்ளிங் ரேட், 3,840Hz PWM டிம்மிங், கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ ப்ரொடெக்ஷன் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision)
- ஆக்டா-கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட்
- ARM மாலி-G720 MC8 GPU
- LPDDR5x அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 இன்-பில்ட் ஸ்டோரேஜ்
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்கான 5300 சதுர மிமீ வெப்பச் சிதறல் பரப்பளவைக் கொண்ட 3டி ஐஸ்-லூப் கூலிங் (3D Ice-Loop Cooling) சிஸ்டம்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.5) சென்சார் (Sony IMX882) பிரைமரி கேமரா
- இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆகியவைகளை கொண்டுள்ளது
- 8 மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ரா-வைட் கேமரா
- 20 மெகாபிக்சல் (f/2.2) செல்பீ கேமரா
- 4K/60 fps தரத்தில் வீடியோ ரெக்கார்டிங்
- கேமரா லென்ஸ்களை சுற்றி 'Redmi Pixel Matrix' அம்சம்
- 7,540mAh பேட்டரி
- USB Type-C போர்ட் வழியாக 100W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 27W வயர்டு ரிவர்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக இது IP66, IP68, IP69 மற்றும் IP69K ரேட்டிங்
- டூயல் சிம் (dual SIM) ஆதரவு
- ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ்3 (HyperOS 3)
- நான்கு வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்கள்
கிஸ்பாட்டின் கருத்து: ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாமா? இந்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாது. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான தேவைகள் இருக்கும். ஆகையால், இந்த ஸ்மார்ட்போனின் நிறைகள் (ஸ்மார்ட்போனில் உள்ள நல்ல விஷயங்கள்) மற்றும் குறைகளை இங்கே பட்டியலிடுகிறோம். அதைவைத்து, உங்களால் ஒரு தீர்மானத்திற்கு வர முடியும் என்று நம்புகிறோம்.
நிறைகள்:
- மிகச்சிறந்த நீடித்துழைப்புடன் கூடிய உயர்தர கட்டமைப்பு
- பிரகாசமான டிஸ்பிளே
- சிறந்த கேமிங் மற்றும் ஒட்டுமொத்த செயல்திறன்
- மிகப்பெரிய பேட்டரி மற்றும் நல்ல பாஸ்ட் சார்ஜிங்.
குறைகள்:
- அதிகப்படியான ப்ரீ-இன்ஸ்டால்டு ஆப்கள்
- ஹீட் மேனேஜ்மென்ட்டில் மேம்பாடு தேவை.


Click it and Unblock the Notifications