Home
Mobile

ரியல் கிங் Redmi.. 7540mAh பேட்டரி, 100W ஹைப்பர்சார்ஜ், 12GB அல்ட்ரா RAM உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இந்திய ஸ்மார்ட்போன் ஆர்வலர்களும், ரெட்மி (Redmi) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கும் ஸ்மார்ட்போன் - ஜூன் 16 அன்று அறிமுகம் ஆகிறது. அது ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) மாடல் ஆகும். ஏனென்றால் டர்போ சீரிஸின் கீழ் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் இதுதான்.

இதேபோல முன்னதாக 4 ஆண்டுகள் கழித்து ஷாவ்மீ டி சீரீஸ் ஸ்மார்ட்போன் ஆக ஷாவ்மீ 17டி (Xiaomi 17T) அறிமுகமானதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக ஷாவ்மீ, ரெட்மி பிராண்டுகள் தங்கள் வியாபார உத்திகளை காலத்திற்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டு வருகின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சரி ரெட்மி டர்போ 5 மாடலுக்கு வருவோம்.

ரியல் கிங் Redmi.. 7540mAh பேட்டரி, 100W ஹைப்பர்சார்ஜ்!

அறிமுக நாள் மிகவும் நெருக்கமாக இருக்கும் சூழ்நிலையில், ரெட்மி நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிட்டுள்ளது. அமேசானில் இதற்கென பிரத்யேகப் பக்கம் (Microsite) உருவாக்கப்பட்டு உள்ளது. இதுவரை வெளிப்படுத்தப்பட்ட விவரங்கள் இது அப்பர்-மிட்ரேன்ஜ் விலைப்பிரிவில் (upper mid-range segment) செயல்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஸ்மார்ட்போனாக இருக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.தற்போது இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி குறித்த விவரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி டர்போ 5 பேட்டரி: இந்த ஸ்மார்ட்போன் 7540mAh பேட்டரி மற்றும் அதற்கான 100W ஹைப்பசார்ஜ் ஆதரவுடன் வரும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் வெளியான இதே மாடல் - சற்றே பெரிய 7560mAh பேட்டரி உடன் வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. 20mAh என்கிற வித்தியாசம் மிகவும் குறைவானதே; எனவே, பேட்டரி பயன்பாட்டு நேரத்தில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

7,540mAh பேட்டரி இருப்பதால், சாதாரண அல்லது மிதமான பயன்பாட்டில் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு நாளுக்கு மேலான பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது நடுத்தர விலைப்பிரிவில் உள்ள பெரும்பாலான போன்கள் பெரிய பேட்டரிகளுடன் வருகின்றன; சில போன்கள் 9000mAh அளவைக்கூட எட்டுகின்றனஎன்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ரெட்மி டர்போ 5 மற்ற அம்சங்கள்: முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே குறித்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன. அதன்படி இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (refresh rate) உடனான 1.5கே டிஸ்பிளே இடம்பெறும். இந்த தொழில்நுட்ப கலவையானது FHD+ டிஸ்பிளேக்களை விட தெளிவான காட்சிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கேமராக்களை பொறுத்தவரை ரெட்மி டர்போ ஸ்மார்ட்போன் ஆனது OIS மற்றும் EIS ஆகிய இரண்டின் ஆதரவு கொண்ட 50MP ப்ரைமரி கேமராவுடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனுடன் 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 20MP செல்பீ கேமராவும் இடம்பெறும். இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8500 (MediaTek Dimensity 8500) சிப்செட் உடன் வரும். இதனுடன் 12GB வரையிலான LPDDR5X அல்ட்ரா ரேம் மற்றும் UFS 4.1 ஸ்டரோஜ் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த கலவையானது ஆப்கள் வேகமாக திறக்கப்படுதல், சீரான மல்டிடாஸ்கிங் (multitasking) மற்றும் மேம்பட்ட கேமிங் அனுபவம் ஆகியவற்றை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நிறுவனத்தின் இந்த புது ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் நார்ட் 6 (OnePlus Nord 6) போன்ற மாடல்களுடன் கடுமையாக போட்டியிடும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.59-இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமென்சிட்டி 8500-அல்ட்ரா சிப்
- 12GB LPDDR5x ரேம்
- லைக்கா-டியூன்டு கேமராக்கள் மற்றும் பிரத்யேக 5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ்
- ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் 3
- 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6,500mAh பேட்டரி

ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் விலை, விற்பனை, சலுகைகள்: இந்தியாவில் ஷாவ்மீ 17டி ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கும், 12GB ரேம் + 512GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.64,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Turbo 5 7540mAh Battery 100W HyperCharge Support Confirmed Ahead India Launch on June 16
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X