Redmi-யின் புது வேட்டைக்காரன்.. 50MP OIS + EIS கேமராவுடன் புது 5ஜி போன்.. VIVO, OPPO-க்கு டாட்டா பைபை!
ஷாவ்மீ (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் அதன் ரெட்மி டர்போ 5 (Redmi Turbo 5) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்வதை ஏற்கனவே உறுதி செய்துள்ள நிலையில், தற்போது இந்த புதிய ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போனில் தரமான கேமரா செட்டப் இடம்பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எப்போது அறிமுகம்? ரெட்மி டர்போ 5 ஸ்மார்போன் வருகிற ஜூன் 16 ஆம் தேதி அன்று இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகம் நெருங்க-நெருங்க, ஷாவ்மீ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனை பற்றிய முக்கிய விவரங்களை / அம்சங்களை வெளியிட்டு வருகிறது.

இதுவரை வெளியான அம்சங்களின் அடிப்படையில் ஷாவ்மீ நிறுவனம் இந்த ஸ்மார்போனை "பணத்திற்கு மதிப்புள்ள ஒரு பிரீமியம் ரக போன்" ஆக நிலைநிறுத்த முயற்சிப்பது போல் தெரிகிறது. இதற்கிடையில் ரெட்மி தேர்போ 5 ஸ்மார்ட்போனின் கேமரா ஹார்ட்வேர் குறித்த விவரங்களு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன
ரெட்மி டர்போ 5 கேமரா விவரங்கள்: ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனின் ரியர் பேனலில் 50எம்பி ஓஐஸ் + இஐஎஸ் கேமரா (50MP OIS + EIS camera) சென்சார் மற்றும் 8எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வீடியோ கால்கள் மற்றும் செல்பீகளுக்காக, இந்த போனில் 20எம்பி செல்பீ கேமரா சென்சாரும் இடம்பெறும்.
வேறு என்னென்ன அம்சங்கள் ரெட்மி டர்போ 5-வில் உறுதி செய்யப்பட்டுள்ளன? இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 அல்ட்ரா சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படும் என்பதும், இந்த சிப்செட் 24GB வரையிலான ரேம் (LPDDR5x அல்ட்ரா) மற்றும் UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த ஸ்மார்ட்போன் AnTuTu பெஞ்ச்மார்க்கில் 2.3 மில்லியனுக்கும் அதிகமான புள்ளிகளை பெறும் என்றும், விவோ வி70 5ஜி (Vivo V70 5G) மற்றும் ஒப்போ ரெனோ15 5ஜி (OPPO Reno15 5G) ஆகியவற்றை விட அதிக சக்தி வாய்ந்தாதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
டிசைன்: ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போன் ஆனது ஒயிட் கலர் ஆப்ஷனிலும் கிடைக்கும் என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது, இது பார்ப்பதற்கு மிகவும் அருமையாகவும், பிரீமியமாகவும் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் டூயல் கேமராவுக்கான கட்அவுட் உள்ளது மற்றும் ரெட்மி பிராண்டிங் சிவப்பு நிறத்தில் உள்ளது. மேலும் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு ஃபிளாஷ் கட்அவுட்டும் உள்ளது.
ஓரிரு நாட்களில், ரெட்மி நிறுவனம் தனது மைக்ரோசைட்டில் ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனை பற்றிய கூடுதல் விவரங்களை (மற்ற முக்கிய அம்சங்களை) உறுதிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள மைக்ரோசைட்டில் உள்ள நோடிப்ஃபை மீ (Notify Me) பட்டனை கிளிக் செய்யலாம்.
விலை: ரெட்மி டர்போ 5 ஸ்மார்ட்போனானது இந்திய சந்தையில் ரூ.50,000 க்கும் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மீ இந்த ஸ்மார்ட்போனை இதுவரை வந்த ரெட்மி போன்களிலேயே வேகமானது என்று அழைக்கிறது, எனவே இந்திய சந்தைக்காக இதில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதைப் பார்க்க, உங்களை போலவே நாங்களும் ஆவலாக உள்ளோம். இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, பேட்டரி மற்றும் சார்ஜிங் குறித்த இன்னும் வெளியாகவில்லை. ஜூன் 16 ஆம் தேதிக்கு முன்பாக நிச்சயமாக இதுகுறித்த விவரங்கள் வெளியாகும். வெளியானதும் அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications