Home
Mobile

மிரளுது மார்கெட்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 12GB ரேம்.. 90W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 6550mAh பேட்டரி.. எந்த மாடல்?

போக்கோ மற்றும் ரெட்மி பிரியர்களை அறக்க பறக்க விடும்படியான பட்ஜெட்டில் 12 ஜிபி ரேம், சோனி சென்சார் கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 6550mAh பேட்டரி, அமோலெட் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 5 ஓஎஸ் போன்ற பீச்சர்களுடன் ரெட்மி டர்போ 4 (Redmi Turbo 4) களமிறங்கி இருக்கிறது. இந்தியாவில் போக்கோ எக்ஸ்7 ப்ரோ (POCO X7 Pro) மாடலாக வெளியாக இருக்கும் இந்த ரெட்மி போனின் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

பட்ஜெட் பிரியர்களிடையே வரவேற்பை பெறும்படி ரூ.24,000 பட்ஜெட் செக்மெண்டில் ரெட்மி டர்போ 4 வெளியாகி இருக்கிறது. சீன மார்கெட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், இந்தியாவில் இதே போன் போக்கோ எக்ஸ்7 ப்ரோ மாடலாக அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இதனால், முன்கூட்டியே விலை மற்றும் பீச்சர்கள் எப்படி இருக்கும் என்பது தெரிந்துவிட்டது.

மிரளுது மார்கெட்.. பட்ஜெட்ல SONY கேமரா.. 12GB ரேம்.. 90W சார்ஜிங்!

ரெட்மி டர்போ 4 (Redmi Turbo 4 Specifications): இந்த ரெட்மி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் 4என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8400 அல்ட்ரா (4nm Octa Core MediaTek Dimensity 8400 Ultra) சிப்செட் மற்றும் மாலி ஜி720 ஜிபியு (Mali G720 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஹைப்பர்ஓஎஸ் 2 (HyperOS 2) பேக் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே, ஏஐ பீச்சர்களை எதிர்பார்க்கலாம். கேமிங் பிரியர்களுக்கான பிளாட் டிசைனில் 6.67 இன்ச் (2712 × 1220 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த அமோலெட் டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ (Corning Gorilla Glass 7i) பாதுகாப்பு வருகிறது.

மேலும், 480Hz டச் சாம்பிளிங் ரேட், 1920Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஓடிடி பிரியர்கள் விரும்பும்படி எச்டிஆர்10பிளஸ் (HDR10+) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ரெட்மி டர்போ 4 போனில் 50 எம்பி மெயின் + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது.

இந்த மெயின் கேமராவில் சோனி எல்ஓய்டி 600 (Sony LYT 600) சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் மற்றும் எல்க்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், 4K வீடியோ ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். 20 எம்பி செல்பீ கேமராவில் ஓம்னிவிஷன் ஓவி20பி (OmniVision OV20B) சென்சாரை பேக் செய்துள்ளது.

ஆகவே, டிஸ்பிளே புரொடெக்சன் மட்டுமல்லாமல், IP66 ரெசிஸ்டன்ட் மற்றும் IP68 + IP69 ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஆகவே, பிரீமியம் குவாலிட்டி மற்றும் டியூரபிலிட்டி எதிர்பார்க்கலாம். 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மட்டுமல்லாமல், 6550mAh பேட்டரியை கொடுக்கிறது. இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) உள்ளன.

மேலும், டைப்-சி ஆடியோ (Type C Audio), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE) சப்போர்ட் கிடைக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.23,485ஆகவும், 16 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.25,835ஆகவும் இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.27,015ஆக இருக்கிறது.

மேலும், 16 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.29,365ஆக இருக்கிறது. கிளவுட் ஒயிட் (Cloud White), ஷேடோ பிளாக் (Shadow Black) மற்றும் லைட் சீ ப்ளூ (Light Sea Blue) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இதே விலை மற்றும் பீச்சர்களின் இந்தியாவில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆனால், கலர் மற்றும் டிசைனில் மாற்றங்கள் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Turbo 4 With 50MP Camera 12GB RAM 6550mAh Battery Launched Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X