Home
Mobile

ஏப்.24 குறிச்சாச்சு.. மிட்-ரேஞ்ச்ல OLED டிஸ்பிளே.. OIS கேமரா.. 7550mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. எந்த மாடல்?

ரெட்மி பிரியர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் பிரியர்களும் மூக்கில் விரல் வைக்கும்படி 1.5K ரெசொலூஷன் கொண்ட ஓஎல்இடி டிஸ்பிளே, ஓஐஎஸ் டெக்னாலஜி கொண்ட 50 மெயின் கேமரா, 90W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7550mAh பேட்டரி, IP69 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ட் போன்ற பிரீமியம் பீச்சர்களுடன் மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் ரெட்மி டர்போ 4 ப்ரோ (REDMI Turbo 4 Pro) வெளியாக இருக்கிறது. இப்போது, முழு பீச்சர்கள், டிசைன் மற்றும் பட்ஜெட் செக்மெண்ட் விவரங்கள் கசிந்துள்ளது.

இந்த ரெட்மி டர்போ 4 ப்ரோ போனானது, ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சீன மார்கெட்டில் முதலில் களமிறங்க இருப்பதால், அங்கு விற்பனைக்கு வந்த பிறகு குளோபல் மற்றும் இந்திய வெளியீடு குறித்த விவரங்கள் தெரியவரும். இந்த போனின் ஒட்டுமொத்த பீச்சர்களும் மார்கெட்டில் கசிந்து, இப்போதே அதன் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. அதை இப்போது பார்ப்போம்.

ஏப்.24 குறிச்சாச்சு.. மிட்-ரேஞ்ச்ல OLED டிஸ்பிளே.. OIS கேமரா மாடல்!

ரெட்மி டர்போ 4 ப்ரோ அம்சங்கள் (REDMI Turbo 4 Pro Specifications): இந்த ரெட்மி போனில் சியோமி ஹைப்பர்ஓஎஸ் 2 (Xiaomi HyperOS 2) கொண்ட ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Qualcomm Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் கிடைக்கிறது. இதுவொரு பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் சிப்செட் மாடலாகும். ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.

இந்த சிப்செட்டுக்கு ஏற்ப பிரீமியம் கேமிங் அவுட்புட் கொடுக்கும்படி அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. இந்த ரெட்மி டர்போ 4 ப்ரோ போனில் 12 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட்கள் வருகின்றன. அதேபோல 256 ஜிபி ஸ்டோரேஜ், 512 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் சப்போர்ட் கொடுக்க இருக்கிறது.

1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெசொலூஷன் கொண்ட 6.83 இன்ச் (2800 x 1280 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஓஐஎஸ் (OIS), ஈஐஎஸ் (EIS) டெக்னாலஜி மற்றும் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.

கேமரா சென்சார்கள் குறித்த விவரங்கள் கசியவில்லை. இருப்பினும், சோனி சென்சார் இடம்பெற வாய்ப்புள்ளது. 20 எம்பி செல்பீ ஷூட்டரை கொடுக்கிறது. மிட்-ரேஞ்ச் போன்களில் வழக்கமாக கிடைக்கும் IP66 ரேட்டிங், IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 7550mAh பேட்டரியில் மிரளவிட்டிருக்கிறது.

இந்த பேட்டரிக்கு 90W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் டைப்-சி போர்ட் சப்போர்ட் உள்ளது. இந்த பெரிய பேட்டரியை பேக் செய்தும் வெறும் 7.98 எம்எம் தடிமனில் ஸ்லிம் லுக் கொடுக்கிறது. ஆனால், எடை 219 கிராம் வருகிறது. மெட்டல் மிடில் ஃபிரேம் கொண்ட ஒயிட், கிரீன் மற்றும் பிளாக் கலர்களில் வெளியாக இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன.

இதில் சிப்செட் மற்றும் கலர் விவரங்களை ரெட்மி நிறுவனமே உறுதி செய்துள்ளது. அதேபோல இந்த போனின் விலை 5,000 யுவானாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. ஆகவே, இந்திய மதிப்பில் ரூ.58,486 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகும்போது முழு விரங்கள் தெரியவரும். அதற்கு முன்பாக பீச்சர்கள் அடுத்தடுத்து உறுதி செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
REDMI Turbo 4 Pro With 50MP Camera To Launch on April 24 in China Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X