Home
Mobile

சீனாக்காரன் செஞ்சி விட்டான் யா.. 7550mAh பேட்டரி.. OLED டிஸ்பிளே.. 16ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி டர்போ 4 ப்ரோ (Redmi Turbo 4 Pro) ஸ்மார்ட்போனை இன்று சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. அதேபோல் ரெட்மி டர்போ 4 ப்ரோ ஹாரி பாட்டர் எடிஷன் (Redmi Turbo 4 Pro Harry Potter Edition) கூட வெளிவந்துள்ளது. இதன் டிசைன் அட்டகாசமாக இருக்கிறது.

இதே ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் வரும் மே மாதம் இந்தியாவில் போக்கோ எப்7 (Poco F7) எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. சரி இப்போது ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

சீனாக்காரன் செஞ்சி விட்டான் யா.. எந்த மாடல்? என்ன விலை?

ரெட்மி டர்போ 4 ப்ரோ அம்சங்கள் (Redmi Turbo 4 Pro specifications): 6.83 1.5கே ஒஎல்இடி (1.5K OLED) டிஸ்பிளே வசதியுடன் ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1280x2800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன், 3200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் உடன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களை கவரும் வகையில் அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த ரெட்மி போனில் உள்ளது. அதேபோல் ஹைப்பர் ஓஎஸ் 2 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 மூலம் இந்த போன இயங்குகிறது.

OIS ஆதரவு கொண்ட 50எம்பி எல்ஒய்டி-600 சென்சார் (LYT-600 sensor)+ 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக இந்த போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார்( In-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers)உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகள் இந்த ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன.

சீனாக்காரன் செஞ்சி விட்டான் யா.. எந்த மாடல்? என்ன விலை?

IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant), 7550mAh பேட்டரி, 90W சார்ஜிங் போன்ற வசதிகளுடன் இந்த ரெட்மி போன் வெளிவந்தது. மேலும் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11 ஏசி, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

ரெட்மி டர்போ 4 ப்ரோ விலை:

12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 4 ப்ரோ மாடலின் விலை 2199 yuan (இந்திய மதிப்பில் ரூ.25,270)

16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 4 ப்ரோ மாடலின் விலை 2299 yuan (இந்திய மதிப்பில் ரூ.26,935)

12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 4 ப்ரோ மாடலின் விலை 2499 yuan (இந்திய மதிப்பில் ரூ.29,280)

16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 4 ப்ரோ மாடலின் விலை 2699 (இந்திய மதிப்பில் ரூ.31,620)

16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 4 ப்ரோ ஹாரி பாட்டர் எடிஷன் விலை 2799 yuan (இந்திய மதிப்பில் ரூ.32,795)

16ஜிபி ரேம் + 1டிபி மெமரி கொண்ட ரெட்மி டர்போ 4 ப்ரோ மாடலின் விலை 2999 yuan (இந்திய மதிப்பில் ரூ.35,135)

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Turbo 4 Pro With 16GB RAM OLED Display Launched in China Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X