வாடா செல்லம்.. உனக்கு தான் வெயிட்டிங்.. 7550mAh பேட்டரி.. 90W சார்ஜிங்.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?
ரெட்மி (Redmi) நிறுவனம் அடுத்த வாரம் ரெட்மி டர்போ 4 ப்ரோ (Redmi Turbo 4 Pro) ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இதே போன் உலக சந்தையில் போக்கோ எப்7 (Poco F7) எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அறிமுகத்திற்கு முன்பு ரெட்மி டர்போ 4 ப்ரோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ரெட்மி டர்போ 4 ப்ரோ அம்சங்கள் (Redmi Turbo 4 Pro specifications): 6.83 இன்ச் பிளாட் ஒஎல்இடி எல்டிபிஎஸ் (OLED LTPS) டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1280x2800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சக்திவாய்ந்த ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் எஸ்ஒசி (Snapdragon 8s Gen 4 SoC) சிப்செட் உடன் ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி டர்போ 4 ப்ரோ வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பலவேறு கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ரெட்மி டர்போ 4 ப்ரோ வெளிவரும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ரெட்மி போன இயங்கும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
7550mAh பேட்டரி உடன் ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு வயர்லெஸ் வசார்ஜிங் வசதியும் இந்த போனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனின் எடை 219 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக வரும் ஏப்ரல் 24-ம் தேதி இந்த புதிய ரெட்மி டர்போ 4 ப்ரோ போன் சீனாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போன் சற்று உயர்வான விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications