90ஸ் கிட்ஸ் ஃபேவரட்.. நாளைக்கு லான்ச் ஆகும் புது Redmi 5ஜி போன்.. IP69 ரேட்டிங், 7550mAh பேட்டரி.. எந்த மாடல்?
ரெட்மி டர்போ 4 ப்ரோ (Redmi Turbo 4 Pro) ஸ்மார்ட்போனை நாளை (ஏப்ரல் 24) சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம். குறிப்பாக இதே ஸ்மார்ட்போன் இந்தியாவில் போக்கோ எப்7 (Poco F7) எனும் பெயரில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் நாளை ரெட்மி டர்போ 4 ப்ரோ ஹாரி பாட்டர் எடிஷன் (Redmi Turbo 4 Pro Harry Potter Edition) கூட சீனாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரெட்மி டர்போ 4 ப்ரோ ஹாரி பாட்டர் பதிப்பு கொண்ட மாடலின் டிசைன் வெளியிடப்பட்டுள்ளது. தனித்துவமான சிவப்பு மற்றும் நீல மற்றும் கருப்பு நிறங்களை கொண்டுள்ளது இந்த மாடல். குறிப்பாக 90'ஸ் கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த டிசைனில் இந்த போன் வெளிவரும் என்பதால் நல்ல வரவேற்பு இருக்கும். இப்போது ரெட்மி டர்போ 4 ப்ரோ போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ரெட்மி டர்போ 4 ப்ரோ அம்சங்கள் (Redmi Turbo 4 Pro specifications): ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் எஸ்ஒசி (Snapdragon 8s Gen 4 SoC) சிப்செட் உடன் ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போனில் வீடியோ எடிட்டிங் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். அதாவது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.
6.83 இன்ச் பிளாட் ஒஎல்இடி எல்டிபிஎஸ் (OLED LTPS) டிஸ்பிளே உடன் இந்த ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1280x2800 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
அதேபோல் 16ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை மெமரி ஆதரவுடன் ரெட்மி டர்போ 4 ப்ரோ வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் ( In-display Fingerprint Sensor) வசதி இந்த போனில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ரெட்மி நிறுவனம்.
ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
குறிப்பாக IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் ரெட்மி டர்போ 4 ப்ரோ வெளிவரும். குறிப்பாக ஆண்ட்ராய்டு 15 (Android 15) மூலம் இந்த ரெட்மி போன இயங்கும். ஆனாலும் ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
7550mAh பேட்டரி உடன் ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. பின்பு வயர்லெஸ் வசார்ஜிங் வசதியும் இந்த போனுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போனின் எடை 219 கிராம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக ரூ.23,371 விலையில் இந்த ரெட்மி டர்போ 4 ப்ரோ போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications