Home
Mobile

அடிச்சான் பாரு சீனாக்காரன்.. 7500mAh பேட்டரி உடன் புதிய Redmi போன்.. மொத்த மார்க்கெட்டும் காலி.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தை தொடர்ந்து ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனமானது, 6000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து, மார்க்கெட்டில் "பிக் பேட்டரி போன்"களை சஜகமாக்கி வருகின்றன. இதன் அர்த்தம் இனிமேல் 6000mAh என்கிற பேட்டரி கெப்பாசிட்டியை முன்வைத்து எந்த ஸ்மார்ட்போனையும் விற்க முடியாது.

இதற்கிடையில் போக்கோ (POCO) நிறுவனமானது 7000mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. தற்போது சீன நிறுவனமான ஷாவ்மீ அதன் துணை நிறுவனமான ரெட்மியின் கீழ் 7500mAh பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி, மொத்த மொபைல் மார்க்கெட்டையும் ஷாக் ஆகியுள்ளது!

அடிச்சான் பாரு சீனாக்காரன்.. 7500mAh பேட்டரி உடன் புதிய Redmi போன்!

இந்த இடத்தில் இன்னொரு ஷாக்கும் உள்ளது. அது என்னவென்றால் 7000mAh பேட்டரி உடன் வரும் போக்கோ ஸ்மார்ட்போனும், 7500mAh பேட்டரி உடன் வரும் ரெட்மி ஸ்மார்ட்போனும் - ஒன்றுதான். அதாவது சீனாவில் ரெட்மி டர்போ 4 ப்ரோ (Redmi Turbo 4 Pro) என்கிற பெயரின்கீழ் அறிமுகமாகும் மாடல் தான் இந்தியாவில் போக்கோ எப்7 (POCO F7) என்கிற பெயரில் அறிமுகமாகும். இவ்விரு போன்களும் எப்போது அறிமுகமாகும்? என்னென்ன அம்சங்களை கொண்டிருக்கும்?

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த தகவலின்படி, ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 7500mAh அல்லது பெரிய பேட்டரியை கொண்டிருக்கும் மற்றும் 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். மேலும் இது "கண்ணியமான தடிமன் மற்றும் எடையை" கொண்டிருக்கும்; ஒரு பிளாட் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது "செயல்திறனை மையமாக கொண்ட ஒரு ஸ்மார்ட்போனாக" இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கூடவே இது ஒரு நல்ல ப்ரைமரி கேமராவை பெறும் ஆனால் அதில் டெலிஃபோட்டோ ஷூட்டர் இடம்பெற அதிக வாய்ப்பில்லை என்றும் டிப்ஸ்டர் கூறுகிறார். இது 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (ஏப்ரல் மாத வாக்கில்) அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது "எஸ்எம்8735" அல்லது ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட் கொண்டு இயங்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இதே ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கும் வரும்போதும் கூட, நாம் இதே சிப்செட்டை எதிர்பார்க்கலாம். ஆனால் 7500mAh பேட்டரியை எதிர்பார்க்க முடியாது. இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ எப்7 என்கிற ரீபிராண்டட் வெர்ஷன் ஆனது 7000mAh பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படலாம்.

போக்கோ எப்7 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட் உடன் வர அதிக வாய்ப்புள்ள பட்சத்தில், இதுவும் ஏப்ரல் 2025 வாக்கில் தான் சந்தைக்கு வரும் ஏனென்றால் இந்த சிப்செட் இன்னும் அறிவிக்கப்படவில்லை, இது 2025 ஏப்ரல் மாத வாக்கில் தான் வெளியாக உள்ளது.

இந்த சிப்செட் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட்டைவிட அதிக சக்தி வாய்ந்ததாகவும் மற்றும் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை விட சற்று குறைவான சக்தி வாய்ந்ததாகவும் இருக்கலாம். சுருக்கமாக இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டின் அன்டர்லாக்டு வெர்ஷனாக இருக்லாம்.

போக்கோ எப்7 ஸ்மார்ட்போனின் பேட்டரி 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரலாம். டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 1.5கே எல்டிபிஎஸ் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொன்றிருக்கலாம். விலையை பொறுத்தவரை, போக்கோ எப்6 ஸ்மார்ட்போன் ரூ.29,999 என்கிற ஆரம்ப விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதால் இதுவும் அதே போன்ற விலைக்குறியுடன் அறிமுகம் செய்யப்படலாம்.

7000mAh அல்லது 7500mAh பேட்டரியுடன் வரும் ஸ்மார்ட்போன்கள் ஆனது 2025 தொடங்கியதும் அறிமுகமாகும் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர், சாம்சங் கேலக்ஸி எஸ்25 சீரிஸ், புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்25 ஸ்லிம், ஒப்போ ரெனோ 13 மற்றும் ரெனோ 13 ப்ரோ ஆகிய மாடல்களுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Turbo 4 Pro Expected to Pack 7500mAh Battery But POCO F7 Comes with 7000mAh Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X