களைகட்டும் 2025.. புயல் வேகத்தில் Redmi நிறுவனம்.. மேலும் 2 புது போன்கள்.. அதுல ஒன்னு 7000mAh பேட்டரி!
உங்களில் சிலருக்கு, போக்கோ (POCO) பிராண்ட் ஆனது எப்படி இந்தியாவில் வண்டி ஒட்டிக்கொண்டு இருக்கிறது என்பது பற்றி ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். சீனாவில் ரெட்மி (Redmi) பிராண்டின் கீழ் அறிமுகமாகும் சில தரமான ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் போக்கோ பிராண்டின் கீழ் அறிமுகமாகுகிறது.
சொந்தமாக, அதாவது சொந்த பிராண்டிங்கின் கீழ் பல மாடல்களை கொண்டிருந்தாலும் கூட, இந்திய சந்தையை பொறுத்தவரை ரெட்மியாக அறிமுகமாகி போக்கோவாக ரீபிராண்டட் செய்யப்படும் மாடல்கள் மீது தான் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வரிசையில் அடுத்ததாக நிற்பது ரெட்மி டர்போ 4 (Redmi Turbo 4) ஸ்மாட்போனாகும்.

ரெட்மி டர்போ 3 (Redmi Turbo 3) ஸ்மார்ட்போனை அப்கிரேடட் வெர்ஷன் ஆக சீனாவில் அறிமுகமாகும் ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் போக்கோ எப்7 (Poco F7) என்கிற மாடலாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷாவ்மீயின் (Xiaomi) துணை பிராண்ட் ஆன ரெட்மி, டர்போ 4 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் பல லீக்ஸ்கள் ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள், வடிவமைப்பு மற்றும் சாத்தியமான அறிமுக தேதியை வெளிப்படுத்தியுள்ளன. முன்னதாக இது 2024 டிசம்பர் மாதத்திலேயே சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் Things About Technology என்கிற வெய்போ பயனரின் கூற்றுப்படி, ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் 2024 க்கு பதிலாக ஜனவரி 2025 இல் அறிமுகமாகும்.
முக்கிய அம்சங்களை பொறுத்தவரை ரெட்மி டர்போ 4 ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 8400 (MediaTek Dimensity 8400) சிப்செட்டுடன் வர வாய்ப்புள்ளது. வடிவமைப்பை பொறுத்தவரை, இது அதன் முன்னோடியை போலவே ஹோல் பஞ்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும். பின்பக்கத்தில் செங்குத்தாக டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கும்.
நினைவூட்டும் வண்ணம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் உடனான ரெட்மி டர்போ 3 கடந்த 2024 ஏப்ரல் மாதம் சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் சீனாவிற்கு வெளியே உள்ள சந்தைகளில் இந்த ஸ்மார்ட்போன், இதே பெயரில் அறிமுகம் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக சர்வதேச சந்தைகளில் போக்கோ எப்6 (Poco F6) ஆக அறிமுகமானது. ஆக ரெட்மி டர்போ 4 ஆனது உலகளவில் போக்கோ எப்7 ஆக அறிமுகமாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்
இதே ஸ்மார்ட்போனின் ப்ரோ வேரியண்ட் ஆன ரெட்மி டர்போ 4 ப்ரோ மாடல் ஆனது ஸ்னாப்டிராகன் 8எஸ் எலைட் சிப்செட்டுடன் அடுத்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகமாகும். ரெட்மி டர்போ 4 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 7000mAh பேட்டரி மற்றும் 1.5கே ரெசல்யூஷன் உடனான டிஸ்பிளேவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இம்மாத தொடக்கத்தில் ரெட்மி நோட் 14 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டதும் இங்கே குறிப்பிடத்தக்கது இந்த சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 14 (Redmi Note 14), ரெட்மி நோட் 14 ப்ரோ (Redmi Note 14 Pro) மற்றும் ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் (Redmi Note 14 Pro Plus) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகின.
ரெட்மி நோட் 14 5ஜி ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.17,999 க்கும் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.18,999 க்கும் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.20,999 க்கும் வாங்க கிடைக்கிறது.
ரெட்மி நோட் 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ரூ.23,999 க்கும் 8ஜிபி + 256ஜிபி ரூ.25,999 க்கும் வாங்க கிடைக்கிறது. ரெட்மி நோட் 14 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி ஆப்ஷன் ரூ.29,999 க்கும், 8ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.31,999 க்கும் மற்றும் 8ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் ரூ.34,999 க்கும் வாங்க கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








