Home
Mobile

கொம்பன் Redmi இறங்கிட்டான்.. 9000mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் உடன் புது போன்.. எந்த மாடல்?

பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் "பிக் பேட்டரி ஸ்மார்ட்போன்களின்" மீது அதிக கவனம் செலுத்த தொடங்கியதன் விளைவாக.. கூடிய விரைவில் ம்போபைல் மார்க்கெட்டில் மூன்று 10000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. சுவாரசியமாக அவைகள் எல்லாமே ஹானர் (Honor) நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் ஆக இருக்கும்.

இதற்கிடையில் இன்னொரு சீன நிறுவனமும் ஒரு 9,000mAh பேட்டரி மற்றும் 10000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. அது ரெட்மி நிறுவனம் ஆகும். சீனாவிலிருந்து வந்த ஒரு புதிய அறிக்கையானது ரெட்மி நிறுவனமானது அதன் முக்கிய ஸ்மார்ட்போன் ஒன்றில் மிகப்பெரிய பேட்டரியை பேக் செய்யவுள்ளது.

கொம்பன் Redmi இறங்கிட்டான்.. 9000mAh பேட்டரி உடன் புது போன்!

நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷனின் கூற்றுப்படி, ரெட்மி பிராண்ட் ஆனது 100W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 9,000mAh சிங்கிள் செல் சிலிக்கான் பேட்டரியை இறுதி செய்துள்ளது. இதோடு ரெட்மி நிறுவனம் அதன் ஆய்வகங்களில் 10,000mAh வெர்ஷனையும் சோதித்து வருவதாக கூறப்படுகிறது.

மைடிரைவர்ஸ் (MyDrivers) வழியாக கிடைத்த தகவலின்படி இது ரெட்மி டர்போ 5 சீரிஸின் (Redmi Turbo 5 Series) கீழ் அறிமுகமாகும் ஒரு மாடல் ஆக இருக்கலாம். இது 2025 டிசம்பர் மற்றும் 2026 ஜனவரி மாதங்களுக்கு இடையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

10000mAh என்கிற சூப்பர் லார்ஜ் பேட்டரி உடன் அறிமுகமாகும் ஹானர் ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, அது ஹானர் பவர் 2 (Honor Power 2) மாடல் ஆக இருக்கலாம் . இது 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹானர் பவர் 2 ஸ்மார்ட்போனில் மட்டுமல்ல ஹானர் நிறுவனமானது 10000mAh பேட்டரி உடன் மொத்தம் 3 மிட்ரேஞ்ச் போன்களை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று போன்களும் - ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 மற்றும் டைமன்சிட்டி 8500 ஆகியவற்றால் இயக்கப்படலாம்

ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 உடனான ஹானர் போனின் பைனல் மார்க்கெட்டிங் பெயர் என்ன என்பது குறித்து தெளிவு இல்லை. ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 உடனான ஸ்மார்ட்போன் ஹானர் 500 (Honor 500) ஆக இருக்கலாம். டைமன்சிட்டி 8500 உடனான மாடலை பொறுத்தவரை ஹானர் பவர் 2 ஆக இருக்கலாம்.

100W சார்ஜிங் + 7000mAh பேட்டரி உடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள புதிய ஷாவ்மீஸ்மார்ட்போன்: அது ஷாவ்மீ 17 (Xiaomi 17) மாடல் ஆகும். ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்ட இந்த ஸ்மார்ட்போன், தற்போது சிங்கப்பூரின் ஐஎம்டிஏ (IMDA) சான்றிதழ் தளத்தில் 25113PN0EG என்கிற மாடல் நம்பரின் கீழ் காணப்பட்டுள்ளது. இது ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் உலகளாவிய வெளியீடு விரைவில் நடைபெற உள்ளது என்பதை குறிக்கிறது.

ஷாவ்மீ 17 இந்திய விலை நிர்ணயம்: இந்தியாவில் இது ரூ.56,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது அதே ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 15 (OnePlus 15), ஐக்யூ 15 (iQOO 15) மற்றும் ரியல்மி ஜிடி 8 ப்ரோ (Realme GT 8 Pro) ஆகிய மாடல்களுக்கு போட்டியை வழங்கும் விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

நினைவூட்டும் வண்ணம் சீனாவில் ஷாவ்மீ 17 ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், இந்திய ரூபாய் மதிப்பின்படி தோராயமாக ரூ.56,000 க்கு அறிமுகமாகி உள்ளது. மேலும் இதே ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் மற்றும் 16 ஜிபி ரேம் + 512GB ஆப்ஷன் முறையே (தோராயமாக) ரூ. 60,000 மற்றும் ரூ.62,000 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi to launch new 9000mAh Battery Phone Could be Redmi Turbo 5 Also Testing 10000mAh Battery
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X