16எம்பி செல்பீ, டூயல் கேம் என மிரட்டும் ரெட்மீ எஸ்2; இந்தியர்களுக்கு அதிர்ஷ்டம்.!

சில தினங்களுக்கு முன்னர் வெளியான தகவலின் படி, சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவிலும் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று வலியுறுத்தின.

|

சில தினங்களுக்கு முன்னர் வெளியான தகவலின் படி, சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது சீனாவிலும் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்படும் என்று வலியுறுத்தின.

அதனை தொடர்ந்து இப்போது கூறப்படும், ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்கள் மற்றும் வடிவமைப்பு மொழி சார்ந்த சில தகவல்கள், சீன தரச்சான்றிதழ் தலமான TENAA வழியாக கசிந்துள்ளது. அதிகாரப்பூர்வ TENAA தளத்தில் மாடல் எண் M1803E6E என்கிற பெயரின் கீழ் காணப்பட்டுள்ள ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு யூனிபாடி வடிவமைப்பை வெளிப்படுத்துகிறது.

வடிவமைப்பு மற்றும் ஓஎஸ்.!

வடிவமைப்பு மற்றும் ஓஎஸ்.!

உடன் சமீபத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்ற பின்பக்க ரியர் கேமரா அமைப்பை காட்சிப்படுத்துகிறது. அதாவது சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன், ஒரு செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள இரட்டை பின்புற கேமரா அமைப்பை காட்டுகிறது. வெளியான TENAA பட்டியலின்படி, சியோமி ரெட்மீ எஸ்2 ஆனது ஆண்ட்ராய்டு 8.1.0 ஓரியோ அடிப்படையிலான ஓஎஸ் கொண்டு இயங்கும்.

டிஸ்பிளே மற்றும் ரேம் மாடல்கள்.!

டிஸ்பிளே மற்றும் ரேம் மாடல்கள்.!

மேலும் இந்த ஸ்மார்ட்போன், ஒரு 5.99 இன்ச் எச்டி+ (720x1440 பிக்சல்கள்) டிஎஃப்டி டிஸ்ப்ளே கொண்டிருக்கும். அது ஒரு 18: 9 என்கிற திரை விகிதம் கொண்டதாக இருக்கும். 2GHz ஆக்டா-கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 SoC உடனான அட்ரெனோ 506 ஜிபியூ மற்றும் 2 ஜிபி, 3 ஜிபி மற்றும் 4 ஜிபி ரேம் விருப்பங்களுடன் இணைக்கப்பட்டுருக்கும்.

பின்பக்க கேமரா.!

பின்பக்க கேமரா.!

கேமரா துறையை பொறுத்தவரை, 12 மெகாபிக்சல் சோனி IMX486 / OmniVision OV12A10 முதன்மை சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் சாம்சங் S5K5E8 இரண்டாம் நிலை சென்சார் கொண்ட, இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்புற கேமரா அமைப்பில் ஒரு எல்ஈடி ப்ளாஷ் மற்றும் EIS (எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ), PDAF லென்ஸ் ஆகிய ஆதரவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

செல்பீ, இணைப்பு ஆதரவுகள் மற்றும் சென்சார்கள்

செல்பீ, இணைப்பு ஆதரவுகள் மற்றும் சென்சார்கள்

முன் பக்கத்தை பொறுத்தவரை, இந்த [புதிய ரெட்மீ வரிசை ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 16 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது. உள்ளடக்க சேமிப்பை பொறுத்தவரை, ரெட்மீ 2எஸ் ஆனது 16ஜிபி, 32 ஜிபி, மற்றும் 64 ஜிபி என்கிற மூன்று மாடல்களில், 128ஜிபி அளவிலான மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்ட மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் கொண்டு வெளியாகும். இது 4G VoLTE, Wi-Fi, ப்ளூடூத், மற்றும் ஜிபிஎஸ் / ஏ-ஜி.பி.எஸ் போன்ற இணைப்பு ஆதரவுகளுடன் சேர்த்து, இன்ப்ராரெட் சென்சார் மற்றும் பின்புறம் பொதிக்கப்பட்டுள்ள கைரேகை சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேட்டரி மற்றும் அளவீடு.!

பேட்டரி மற்றும் அளவீடு.!

ஒரு 3080mAh பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது பிளாக், ரோஸ் கோல்ட், கோல்ட், வெள்ளை, நீலம், சிவப்பு, பிங்க், சாம்பல் மற்றும் வெள்ளி உள்ளிட்ட வண்ண பல விருப்பங்களில் வெளியாகும். அளவீட்டை பொறுத்தவரை (TENAA தளத்தில் காணப்பட்ட படங்களை வைத்து), ரெட்மீ எஸ்2 ஆனது ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் அளவில் இருக்கும் என்பது போல் தெரிகிறது.

How to check PF Balance in online (TAMIL)
நிச்சயமாக இந்தியாவில் வெளியாகும்.!

நிச்சயமாக இந்தியாவில் வெளியாகும்.!

இந்த சியோமி ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை. இருப்பினும், இதுவரை வெளியான தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போன் சீனா மற்றும் இந்தியாவில் வெளியாகும் என்பது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும் பல ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன் பற்றிய அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் மொபைல் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
Redmi S2 Specifications and Design Revealed via TENAA Listing. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X