சென்டிமென்ட் படி வருடந்தோறும் இதை செய்யும் Redmi.. ஸ்வீட் சிப்செட் உடன் ஒரு ட்ரீட்!

|

Redmi Note 11 Pro 2023 சிறப்பம்சங்கள் கீக்பெஞ்ச் மூலம் வெளியாகி உள்ளது. ஒவ்வொரு நிறுவனமும் 5ஜி போனுக்கு தயாராகி வரும் இந்த நேரத்தில் ரெட்மி நிறுவனம் பக்கா 4ஜி போனுக்கு தயாராகி வருகிறது. அதுவும் இது சிறந்த ஸ்மார்ட்போனாக வெளியாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

சென்டிமென்ட் பார்க்கிறதா ரெட்மி?

சென்டிமென்ட் பார்க்கிறதா ரெட்மி?

ரெட்மி நிறுவனம் நோட் 11 தொடரில் இருந்து அடுத்த தொடர் மாடலான ரெட்மி 12 சீரிஸை அறிவித்திருக்கிறது. இருப்பினும் நிறுவனம் ரெட்மி 11 ப்ரோ 2023 இல் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சியோமி இப்படி செய்வது முதன்முறையல்ல, கடந்த ஆண்டும் இதேபோல் நிறுவனம் ரெட்மி 10 2022 மாடலை அறிவித்தது. இதை நிறுவனம் சென்டிமென்டாக பார்க்கிறது என்பது தெரியவில்லை.

இருப்பினும் நிறுவனம் இதுபோன்ற நடவடிக்கையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி 2023 இன் தொடக்கத்தில் முந்தைய மாடல் உடன் தொடர்புடைய ஸ்மார்ட்போனை நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக என கணிக்கப்படுகிறது.

உலகளாவிய மாறுபாடாக இருக்க வாய்ப்பு

உலகளாவிய மாறுபாடாக இருக்க வாய்ப்பு

Redmi Note 11 Pro 2023 மாடல் உலகளாவிய மாறுபாடாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. Geekbench இல் மாடல் எண் 2209116AG உடன் இந்த சியோமி போன் காணப்படுகிறது. அதோடு கீக்பெஞ்ச் இல் இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் ரேம் உள்ளிட்ட முக்கிய விவரக்குறிப்புகள் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.

Redmi Note 11 Pro 2023 சிறப்பம்சங்கள்

Redmi Note 11 Pro 2023 சிறப்பம்சங்கள்

Geekbench பட்டியலின் படி, Redmi Note 11 Pro 2023 ஆனது Qualcomm சிப்செட்டைக் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் செயலியின் மதர்போர்டுக்கு "ஸ்வீட்" என பெயரிடப்பட்டிருக்கிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட்டைக் குறிக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

4ஜி போனாக இருக்க அதிக வாய்ப்பு

4ஜி போனாக இருக்க அதிக வாய்ப்பு

மேலும் இந்த சிப்செட்டை வைத்து இது 4ஜி போனாக இருக்கும் என்பது ஏறத்தாழ முடிவு செய்ய முடிகிறது. Redmi Note 11 Pro 4G ஆனது 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் MediaTek Helio G96 SoC உடன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Redmi Note 11 Pro 2023 இன் வடிவமைப்பு

Redmi Note 11 Pro 2023 இன் வடிவமைப்பு

Redmi Note 11 Pro 2023 ஆனது கடந்த மாதம் Google Play Console இல் தோன்றியது. அதில் மூன்று வருட முந்தைய சிப்செட் ஆன Snapdragon 712 உடன் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால் இதில் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் இடம்பெறவே அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது. Redmi Note 11 Pro 2023 இன் வடிவமைப்பும் Google Play Console இல் வெளியானது. இது கிட்டத்தட்ட நோட் 10 ப்ரோ போன்றே இருக்கிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில்

கீக்பெஞ்ச் படி, வரவிருக்கும் Redmi Note 11 Pro 2023 ஆனது 8ஜிபி ரேம் ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் எனவும் வெளியான தகவல் தெரிவிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 11 ப்ரோ அம்சங்கள்

ரெட்மி நோட் 11 ப்ரோ அம்சங்கள்

வெளியான ரெட்மி நோட் 11 ப்ரோ அம்சங்கள் குறித்து பார்க்கையில், 1,080x2,400 பிக்சல் தீர்மானம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.67 இன்ச் முழு எச்டி அமோலெட் டாட் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருந்தது. மேலும் இதில் மீடியாடெக் ஹீலியோ ஜி96 எஸ்ஒசி சிப்செட், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4ஜிபி மற்றும் 8ஜிபி ரேம், 128ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவுடன் வெளியானது.

67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி

108எம்பி கேமரா+ 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் மற்றும் 16எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இதில் இருக்கிறது. இதன் அடிப்படை மாறுபாட்டின் விலை ரூ.20,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே Redmi Note 11 Pro 2023 ரூ.15,000 விலைப்பிரிவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Redmi's Sentiment Smartphone: New Smartphone Might be Launching With "Sweet" Chipset!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X