ரெட்மி நோட் 9T என்ற பெயரில் புது ஸ்மார்ட்போன் மாடல்.. வெளியான கீக்பெஞ்ச் தகவல்..

|

டிசம்பர் தொடக்கத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 5ஜி ஸ்மார்ட்போனின் மறுவடிவமாக்கப்பட்ட பதிப்பில் சியோமி செயல்படுவதாகக் கூறப்படுகிறது. மறுவடிவமாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் பதிப்பை நிறுவனம் ரெட்மி நோட் 9T என்று பெயரிடுவதாக தெரிகிறது. உலக சந்தையில் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 9T என்ற பெயரில் புது ஸ்மார்ட்போன் மாடல்..

கீக்பெஞ்ச் பட்டியல் சியோமி M200722G என்று குறிப்பிடும் மாடல் எண்ணுடன் வருகிறது. சுவாரஸ்யமாக, சீனாவில் ரெட்மி நோட் 9 5 ஜி மாடல் எண் M2007J22C உடன் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாடல் எண் M200722G ரெட்மி நோட் 9T உடன் தொடர்புடையது, ஏனெனில் இந்த சாதனம் தாய்லாந்தின் NBTC சான்றிதழ் தளத்திலும் மலேசியாவின் (SRIM) சான்றிதழ் தளத்திலும் அதே மாதிரி எண்ணுடன் காணப்பட்டது.

இது மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பாக இருக்க வேண்டும் என்பதை இது உறுதிப்படுத்துகிறது. கீக்பெஞ்ச் பட்டியலின் படி, இந்த போன் ARM MT6853T சிப்செட் உடன் ஜோடியாக 4 கிக் ரேம் உடன் வருவதற்கு வாய்ப்புள்ளது. இதே செயலி தான் ரெட்மி நோட் 9 5 ஜி போனின் கீக்பெஞ்ச் மதிப்பீட்டின் போது அடையாளம் காணப்பட்டது. ரெட்மி நோட் 9T மீடியாடெக் டைமன்சிட்டி 800U செயலியால் இயக்கப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 5ஜி போன், 6 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட இரண்டு வகைகளில் மட்டுமே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. 4 ஜிபி ரேம் மாறுபாடு இதில் இல்லை, பட்டியலின் படி ரெட்மி நோட் 9 டி ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டின் பழைய பதிப்பு என்பதால் இந்த தகவலை முழுமையாக நம்மால் நம்ப முடியவில்லை. ரெட்மி நோட் 9T பற்றிய கூடுதல் தகவல்களுக்குக் காத்திருக்கலாம்.

Best Mobiles in India

English summary
Redmi Note 9T spotted on Geekbench : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X