ஜனவரி 8: 6.53-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 9டி 5ஜி.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி வரும் ஜனவரி 8-ம் தேதி புதிய ரெட்மி நோட் 9டி 5ஜி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும். மேலும் ஆன்லைனில் வெளிவந்த இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சியோமி ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் எப்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 1080×2340 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.
இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 800யு பிராசஸர் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சியோமி ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட்
கொடுக்கப்படும்.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிமைரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பி செல்பீ கேமரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உட்பட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i), 5ஜி SA/ NSA, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சிஎன பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இந்த சாதனத்தின் பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.


Click it and Unblock the Notifications