Home
Mobile

இன்று மீண்டும் விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்! விலை மற்றும் விபரம்!

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இன்று மீண்டும் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் அமேசான் மற்றும் மி.காம் வலைதளங்களில் இன்று சரியாக 2மணி முதல் விற்பனைக்கு கிடைக்குமென்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபரங்களை பார்க்கலாம்.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

2ஜிகாஹெர்ட்ஸ்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவுஇருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி சென்சார்

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

மெமரி

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, சாம்பல், பசுமை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

சார்ஜிங் ஆதரவு

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ப்ளூடூத் 5.0, என்எப்சி, வைஃபை 802.11,யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை

ரெட்மி 9 ஸ்மார்ட்போனின், 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.11,999 ஆக உள்ளது. இதன் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை ரூ.13,499 ஆக உள்ளது. அதேபோல், இதன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499 ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 9 with 5,020mAh Battery Mobile Sale Today at 2PM : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X