Home
Mobile

Xiaomi ரெட்மி நோட் 9 போனின் முதல் விற்பனை சலுகையுடன் துவங்கியது! விலை என்ன தெரியுமா?

சியோமி தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடலான ரெட்மி நோட் 9 சாதனத்தை இந்த மாத தொடக்கத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தியது. புதிய ஸ்மார்ட்போன் இப்போது ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் நோட் 9 புரோ மேக்ஸ் என்று மூன்று மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்பொழுது புதிய ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனுக்கான விற்பனை அமேசான் தளத்தில் துவங்கியுள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ விற்பனை எப்பொழுது?

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ விற்பனை எப்பொழுது?

இந்த புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமாக அதன் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய 5,020 எம்ஏஎச் பேட்டரி மற்றும் மீடியாடெக் ஹீலியோ ஜி 85 பிராசஸர் உடன் அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும். ரெட்மி நோட் 9 விற்பனையைத் தொடர்ந்து வரும் ஆகஸ்ட் 6ம் தேதி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை நடக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 14ம் தேதி ரெட்மி நோட் 9 ப்ரோ விற்பனை நடைபெறும்.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ தளத்தில் விற்பனைக்கு வந்துள்ள ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ .11,999 என்ற விலையில் விற்பனை ஆகிறது. அதேபோல், இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 14,999 என்ற விலையில் கிடைக்கிறது. ரெட்மி நோட் 9 போனில், 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டும் உள்ளது, ஆனால் விலை வெளியிடப்படவில்லை.

சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி

சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி

இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் மி.காம் வழியாக இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. விற்பனை சலுகைகளில் எச்எஸ்பிசி கேஷ்பேக் கார்டுகளில் 5 சதவீத உடனடி தள்ளுபடி, அமேசான் பே, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்கு பிரைம் சந்தாவுடன் 5 சதவீத கேஷ்பேக் மற்றும் பிரைம் அல்லாத அட்டைதாரர்களுக்கு 3 சதவீத கேஷ்பேக் ஆகியவை கிடைக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டுகளுக்கு விலை இல்லாத ஈ.எம்.ஐ வசதியும் உள்ளது.

ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்

ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்

  • 6.67' இன்ச் கொண்ட டாட் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே
  • மீடியாடெக் ஹீலியோ ஜி 85 பிராசஸர்
  • 4 ஜிபி அல்லது 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
  • 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 சேமிப்பு
  • பிரத்யேக எஸ்டி கார்டு ஸ்லாட்
  • குவாட் ரியர் கேமரா அமைப்பு
  • 48 மெகாபிக்சல் பிரதான கேமரா
  • நிறங்கள்

    நிறங்கள்

    • 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா
    • 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
    • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • 22.5W பாஸ்ட் சார்ஜிங் உடன் கூடிய 9W ரிவர்ஸ் சார்ஜிங்
    • 5,020 எம்ஏஎச் பேட்டரி
    • நிறம்: அக்வா கிறீன், ஆர்க்டிக் வைட் மற்றும் பேப்பில் க்ரெய்

Best Mobiles in India

English summary
Redmi Note 9 Sale Starts Today At 12 Noon Via Amazon, Mi.Com Know The Price, Specifications And More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X