இன்று ப்ரோ., நாளை ப்ரோ மேக்ஸ்: விற்பனைக்கு வரும் ரெட்மி புதுமாடல்., முந்தியடிக்கும் வாடிக்கையாளர்கள்
ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் விற்பனை அதிரடியாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நோட் 9 ப்ரோ மற்றும் நாளை நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஆகியவை சியோமியின் பிரபல ஸ்மார்ட்போன் புதிய மாடல்கள் ஆகும். இந்த சாதனங்களில் நோட் 9 ப்ரோவின் முதல் விற்பனை மார்ச் மாதத்தில் இருந்து இந்திய சந்தையில் தொடங்கப்பட்டது.

ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் விற்பனை
ரெட்மி நோட் ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ்-ன் விற்பனை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து ரெட்மி நோட் ப்ரோ மேக்ஸ் ஜூன் 11 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு முதல் விற்பனை தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இந்த போனின் இரண்டாவது விற்பனை நாளை மதியம் 12 மணிக்கு மீண்டும் தொடங்க உள்ளது. அதேபோல் ரெட்மி நோட் 9 ப்ரோ விற்பனை அமேசான்.காம் மற்றும் எம்ஐ.காம்-ல் தொடங்கியது.

அமேசான் மற்றும் எம்ஐ.காம்
இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் எம்ஐ.காம் மூலம் வாங்கலாம். அமேசான் மற்றும் எம்ஐ.காம்-ல் ஏர்டெல் டபுள் டேட்டா சலுகைகளான ரூ.298 மற்றும் ரூ.398 அன்லிமிட்டெட் பேக் வசதி வழங்கப்படுகிறது. அதோடு நோட் எக்சேஞ்ச் சலுகைகள் குறித்து எதும் கொரோனா தொற்று காரணமாக அறிவிக்கப்பட வில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ரெட்மி நோட் ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் ப்ரோ மேக்ஸ்., 6GB + 64GB மாடல் போனானது ரூ.16,499-க்கு விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல் 6GB + 128GB மாடல் போனானது ரூ.17,999-க்கு விற்கப்படுகிறது. மேலும் 8GB + 128GB மாடல் போனானது ரூ.19,999-க்கு விற்பனைக்கு வருகிறது. 4ஜிபி ரேம் கொண்ட மாடல் சியோமி அறிமுகப்படுத்தப்படவில்லை.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720
குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

64MP முதன்மை சென்சார் கேமரா
32 எம்பி செல்பி கேமரா பஞ்ச்-ஹோல் வசதியோடு உள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்ட குவாட்-ரியர் கேமரா அமைப்பானது 64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும்.

5020 எம்ஏஹெச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஹெச் பேட்டரி மூலம் 33வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவோடு இயக்கப்படுகிறது. குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் தேடுபவர்களுக்கு இது சிறந்த மாடலாகும். அதோடு 4 ஜி வோல்ட் வசதி மூலம் இயக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ
ரெட்மி நோட் 9 ப்ரோ இந்தியாவில் 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மாடல் போனானது ரூ.13,999-க்கு கிடைக்கிறது. அதேபோல் ரெட்மி நோட் 9 ப்ரோ மாடலானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போன் ரூ.16,999-க்கு கிடைக்கிறது.

48 மெகாபிக்சல் பிரதான கேமரா
ரெட்மி நோட் 9 ப்ரோ ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. இது 6.67 இன்ச் டிஸ்ப்ளே வசதி மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஓசி ஆக்டோகோர் வசதியும் இருக்கிறது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சர் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகா பிக்சல் மேக்ரோ லென்ஸ், 2 மெகா பிக்சல் கேமரா வசதியும் உள்ளது.

5020 எம்ஏஹெச் பேட்டரி
அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் வேக சார்ஜிங் வசதியும் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802, ப்ளூடூத் வி5.0 வசதியும் இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications