Home
Mobile

Xiaomi ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் போனின் முதல் விற்பனை எப்பொழுது தெரியுமா?

சியோமி நிறுவனம் இறுதியாக தனது சியோமி ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. சியோமி நோட் 9 புரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் புதிய 8 ஜிபி ரேம் வேரியண்ட்டின் முதல் விற்பனை இந்த ஜூலை 29 புதன்கிழமை நடைபெறும் என்று தனது டிவீட்டில் பக்கத்தில் அறிவித்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ்

சியோமி ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ்

சியோமி ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மார்ச் மாதத்தில் ஊரடங்கிற்கு முன்பு இந்தியாவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை 6 ஜிபி + 64 ஜிபி மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி ஆகிய இரண்டு வகைகளை மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வந்த நிறுவனம், தற்பொழுது அதன் 8 ஜிபி ரேம் கொண்ட மாடல் வேரியண்ட்டை வெளியிட தயாராகிவிட்டது.

சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலை

சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலை

நோட் 9 புரோ மேக்ஸ் சமீபத்தில் ரூ .500 விலை உயர்வு பெற்றது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ .19,999 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் வரும் ஜூலை 29ம் தேதி மதியம் 12 மணிக்கு Mi.com இல் விற்பனைக்குக் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இதன் மற்ற இரண்டு வேரியண்ட் மாடல்கள் அமேசான் மற்றும் சியோமி கடைகளில் கிடைக்கிறது.

சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இந்த மற்ற வேரியண்ட்

சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இந்த மற்ற வேரியண்ட்

சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ .19,999 ஆகும். இதன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடல் ரூ .16,999 என்ற விலைக்கு கிடைக்கிறது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட வேரியண்ட் ரூ.18,499 என்ற விலையில் கிடைக்கிறது.

சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சம்

சியோமி ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சம்

  • 6.67' இன்ச் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே
  • 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதமும் 120 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதமும் உள்ளது
  • பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி
  • 6 ஜிபி அல்லது 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
  • 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 சேமிப்பு
  • பிரத்யேக எஸ்டி கார்டு ஸ்லாட்
  • குவாட் ரியர் கேமரா

    குவாட் ரியர் கேமரா

    • குவாட் ரியர் கேமரா அமைப்பு
    • 64 மெகாபிக்சல் பிரதான கேமரா
    • 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட்-ஆங்கிள் கேமரா
    • 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா
    • 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்
    • 32 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா
    • 33W பாஸ்ட் சார்ஜிங்
    • 5,020 எம்ஏஎச் பேட்டரி
    • நிறம்: இன்டர்ஸ்டெல்லர் பிளாக், கிளேசியார் வைட் மற்றும் அரோரா ப்ளூ

Best Mobiles in India

English summary
Redmi Note 9 Pro Max Smartphone 8GB Variant To Go On First Sale In India On July 29 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X