இந்த முறை மிஸ் பண்ணாதிங்க: Redmi Note 9 Pro Max அடுத்த விற்பனை தேதி., இப்பவே விலை அதிகரிப்பு!
Redmi Note 9 Pro Max ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை விற்பனைக்கும் வரவிருக்கும் விற்பனையிலும் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்
ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்களை நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்களிடம் அதீத வரவேற்பு கிடைத்து வருகிறது. இதில் ரெட்மி நோட் 9 ப்ரோ விற்பனை மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டது. அதேபோல் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ், ஜூன் 11 முதல் தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.

அமேசான் மற்றும் எம்.காம்
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விற்பனை அமேசான் மற்றும் எம்.காம்-ல் ஜூன் 24 ஆம் மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன்களின் மூன்றாவது விற்பனைக்கு பல்வேறு தரப்பினரும் காத்துக் கொண்டிருந்த இந்த விற்பனை தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் எம்ஐ.காம்-ல் ஏர்டெல் டபுள் டேட்டா சலுகைகளான ரூ.298 மற்றும் ரூ.398 அன்லிமிட்டெட் பேக் வசதியோடு வருகிறது.

ஸ்மார்ட்போனின் விலை அதிகரிப்பு
6GB + 64GB மாடல் ஸ்மார்ட்போனானது ரூ.16,499-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.16,999-க்கு விற்கப்படுகிறது, 6GB + 128GB மாடல் போனானது ரூ.17,999-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது விலை உயர்வுக்கு பிறகு ரூ.18,999-க்கு விற்கப்படுகிறது. 8GB + 128GB மாடல் போனானது ரூ.19,999-க்கும் விற்கப்படுகிறது.

ஃபுல் ஹெச்டி ப்ளஸ் தெளிவுத் திறன் வசதி
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 256 ஜிபி மைக்ரோ எஸ்டி விரிவாக்க வசதியோடு உள்ளது. அதோடு ஆண்ட்ராயுட 10 ஓஎஸ் ஆதரவோடு அரோரா ப்ளூ, க்ளேசியர் வைட் மற்றும் இன்டெர்செல்லார் கருப்பு நிறத்தில் விற்கப்படுகிறது. 6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளே, 1080*2400 பிக்சல் ஃபுல் ஹெச்டி ப்ளஸ் தெளிவுத் திறன் வசதியோடு இது உள்ளது.

64MP முதன்மை சென்சார் கேமரா
64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP சென்சார் கேமரா 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும். 32 மெகா பிக்சல் பஞ்ச் ஹோல் செல்பி கேமரா வசதியும் உள்ளது.

5020 எம்ஏஹெச் பேட்டரி
5020 எம்ஏஹெச் பேட்டரி மூலம் 33வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான லுக் மற்றும் பல்வேறு சிறப்பு அம்சங்களோடு விற்பனைக்கு வருவதால் இது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications