ரெட்மி இந்த மாடல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நற்செய்தி: கிடைத்தது ஆண்ட்ராய்டு 11 அப்டேட்!

|

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் சிறந்த கேமரா சென்சார்கள், வேகமான சார்ஜிங், திறமையான செயலி மற்றும் பெரிய டிஸ்ப்ளே அம்சத்தோடு வெளியானது. இந்த ஸ்மார்ட்போன் பலரிடமும் வரவேற்பு பெற்றது. இது உயர்புதுப்பிப்பு வீதத்தை கொண்டது. ரெட்மி 9 ப்ரோ மேக்ஸ் என்பது ரெட்மி நோட் 9 தொடர் வாரிசாக இருக்கிறது. ரெட்மி 9 தொடரின் உயர்தர மாடலாக இது இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

ஆண்ட்ராய்டு 11 அப்டேட்

தனிப்பயனாக்கப்பட்ட எம்ஐயூஐ11 ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் உடனான அவுட் ஆஃப் பாக்ஸ் உடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான எம்ஐயூஐ12 புதுப்பிப்பை பெறுகிறது.

புதிய புதுப்பிப்பு அளவு

புதிய புதுப்பிப்பு அளவு

புதிய புதுப்பிப்பு அளவு குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 2.3 ஜிபி அளவை கொண்டுள்ளது. இதன் பதிப்பு எண் MIUI V12.0.1.0.RJXINXM உடன் வருகிறது. பயனர்களுக்கு புதுப்பிப்பு அறிவிப்பு வந்தவுடன் பயனர்கள் சமீபத்திய ஃபார்ம்வேரை பதிவிறக்கம் செய்யலாம். சமயத்தில் பயனர்களுக்கு புதுப்பிப்பு வராதபட்சத்தில் பயனர்கள் புதுப்பிப்பு அறிவிப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும்.

அப்டேட் செய்வதற்கான வழிமுறைகள்

அப்டேட் செய்வதற்கான வழிமுறைகள்

புதுப்பிப்பு அறிவிப்பு வராத பயனர்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். பயனர்கள் செட்டிங்க்ஸ் தேர்வுக்குள் சென்று About Phone என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். இதற்குள் சென்று System Updates என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலை

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலை

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலை குறித்து பார்க்கையில், இது இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. இதன் முதல் வேரியண்ட் விலை ரூ.16,9999 ஆக உள்ளது. அதேபோல் ஹை எண்ட் மாடலின் விலை ரூ.19,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ, சாம்பைன் கோல்ட், க்ளேசியர் வைட் என்ற மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 செயலி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 செயலி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட்அட்ரினோ 618 ஜிபியூ வரை வருகிறது. இந்த சாதனம் 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும்படியான மெமரி விரிவாக்க வசதி உள்ளது.

6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளே வசதி

6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளே வசதி

இந்த சாதனம் 6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளே மூலம் இயக்கப்படுகிறது. இந்த காட்சி 1080 x 2400 பிக்சல்களின் FHD+ தெளிவுத்திறன் வசதியோடு வழங்குகிறது. 64MP முதன்மை சென்சார் கேமரா கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியும் இதில் உள்ளது. 32 எம்பி செல்பி கேமரா பஞ்ச்-ஹோல் வசதியோடு உள்ளது. பின்புறத்தில் வழங்கப்பட்ட குவாட்-ரியர் கேமரா அமைப்பானது 64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும்.

5020 எம்ஏஎச் பேட்டரி

5020 எம்ஏஎச் பேட்டரி

5020 எம்ஏஎச் பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஹெச் பேட்டரி மூலம் 33வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவோடு இயக்கப்படுகிறது. குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போன் தேடுபவர்களுக்கு இது சிறந்த மாடலாகும். அதோடு 4 ஜி வோல்ட் வசதி மூலம் இயக்கப்படுகிறது.

சுருக்கமாக சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

சுருக்கமாக சியோமி நோட் 9ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

1.டிஸ்பிளே: 6.67-இன்ச் முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே (1080x2400 பிக்சல்)

2.கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு சிப்செட்: குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி எஸ்ஒசி

3.ரேம்: 6ஜிபி/8ஜிபி

4.மெமரி: 64ஜிபி/128ஜிபி

5.ரியர் கேமரா: 64எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்

6.செல்பீ கேமரா: 32எம்பி

7.பேட்டரி: 5020எம்ஏஎச்

8.33வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,

9.கைரேகை சென்சார் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11ஏசி,

10. புளூடூத் வி 5.0,ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்,யுஎஸ்பி டைப்-சி போர்ட்,3.5எம்எம் ஆடியோ ஜாக்

Best Mobiles in India

English summary
Redmi Note 9 Pro Max Gets Anroid 11 Update in India: How to Update Your Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X