Home
Mobile

இரண்டு ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலை உயர்வு.!

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.500-வரை விலை உயர்வு அறிவித்துள்ளது. அதேபோல ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.300-வரை விலை உயர்வு அறிவித்துள்ளது இந்நிறுவனம்.

 மற்றும் 64ஜிபி மெமரி

தற்சமயம் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆனது 16,999-விலையிலும்,
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9ப்ரோ மேக்ஸ் மாடல் ரூ.18,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி

அதேபோல 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி கொண்ட ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் ஆனது 8,299-விலையிலும், 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி கொண்ட ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.7,499-விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

 ரெட்மி நோட் 9 ப்ரோ டிஸ்ப்ளே

ரெட்மி நோட் 9 ப்ரோ டிஸ்ப்ளே

இந்த ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த போனானது அரோரா ப்ளூ, க்ளேசியர் வைட் மற்றும்இன்டெர்செல்லர் கருப்பு நிறத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 6.67 இன்ச் டாட் டிஸ்ப்ளே மூலம் இயக்கப்படுகிறது. இந்த காட்சி
1080 x 2400 பிக்சல்களின் FHD+ தெளிவுத்திறன் வசதியோடு வழங்குகிறது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் செயலி

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் செயலி

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மாடல் போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட்அட்ரினோ 618 ஜிபியூ வரை வருகிறது. இந்த சாதனம் 256 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும்படியான மெமரி விரிவாக்க வசதிஉள்ளது.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் கேமரா

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் கேமரா

கார்னிங் கொரில்லா கிளாஸ் வசதியும் இதில் உள்ளது. 32 எம்பி செல்பி கேமரா பஞ்ச்-ஹோல் வசதியோடு உள்ளது. பின்புறத்தில்
வழங்கப்பட்ட குவாட்-ரியர் கேமரா அமைப்பானது 64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு 5MP மேக்ரோ சென்சார் மற்றும் 2MP ஆழம் சென்சார் ஆகியவை அடங்கும்.

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் பேட்டரி

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 5020 எம்ஏஹெச் பேட்டரி மூலம் 33வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவோடு இயக்கப்படுகிறது. குறைந்தவிலையில் சிறந்த ஸ்மார்ட்போன் தேடுபவர்களுக்கு இது சிறந்த மாடலாகும். அதோடு 4 ஜி வோல்ட் வசதி மூலம் இயக்கப்படுகிறது.

சியோமி ரெட்மி 8ஏ டூயல் டிஸ்பிளே

சியோமி ரெட்மி 8ஏ டூயல் டிஸ்பிளே

சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போன் மாடல் 6.22-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது.சியோமி ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 439சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 சியோமி ரெட்மி 8ஏ டூயல் கேமரா

சியோமி ரெட்மி 8ஏ டூயல் கேமரா

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்
பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா,எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவுஎன பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். குறிப்பாக கூகுள் லென்ஸ் ஆதரவைக் கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள். சியோமி ரெட்மி 8ஏ டூயல் ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 18வாட் சார்ஜிங் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Redmi Note 9 Pro Max, Redmi 8A Dual price again hiked in India: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X