ஷேடோ பிளாக் நிறத்தில் அறிமுகமான ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்.!
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் புதிய ஷேடோ பிளாக் வண்ண விருப்பம் இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆரம்பத்தில் ஆக்வா கிரீன், ஆர்க்டிக் ஒயிட் மற்றும் பெப்பிள்
கிரே ஆகிய மூன்று வண்ண வகைகளில் வாங்க கிடைத்தது. பின்னர் நான்காவது வண்ணம் விருப்பமாக ஸ்கார்லெட் ரெட் அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது ஐந்தாவது வண்ண வருப்பமாக ஷேடோ பிளாக் சேர்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 9 ஷேடோ பிளாக் வேரியண்ட்டின் விலை நிர்ணயம் மீது குழப்பம் நிலவுகிறது. ஏனெனில் நிறுவனத்தின் இணையதளத்தில் ஒரு குறிப்பிட்ட நேர தீபாவளி சலுகையின் ஒரு பகுதியாக ரூ.11,499 என்று (4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ்) என்று பட்டியலிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2340 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவுஇருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ப்ளூடூத் 5.0, என்எப்சி, வைஃபை 802.11,யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications