48எம்பி கேமராவுடன் அசத்தலான ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

|

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி தனது புதிய ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 9

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

மிகவும் அருமையாக இருக்கும்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும்
ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவுஇருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்மாடல்.

ரூ.6,990 மட்டுமே- பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன்: Honor 9C, 9A, 9S சிறப்பம்சங்கள்!ரூ.6,990 மட்டுமே- பக்கா பட்ஜெட் ஸ்மார்ட்போன்: Honor 9C, 9A, 9S சிறப்பம்சங்கள்!

எல்இடி பிளாஸ்

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் +2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடிபிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

உள்ளிட்ட

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, சாம்பல், பசுமை உள்ளிட்ட
நிறங்களில் கிடைக்கும்.

 5020எம்ஏஎச்

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது

வைஃபை 802.11

புளூடூத் 5, என்எப்சி, வைஃபை 802.11இயூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் மேலும் இந்த சாதனங்களின் விலை மதிப்பு(இந்திய மதிப்பில்) 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.14,940-ஆக உள்ளது, பின்பு 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.18,690-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 9 launched Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X