ரெட்மி நோட் 9 ஜூலை 20 அறிமுகம்: விலை இவ்வளவு தானா?
கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி நிறுவனம் சார்பில தெரிவிக்கப்பட்டது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போன் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிப்பு
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதை உணர்த்தும் வகையில் சமீபத்தில் டீசரை வெளியிட்டது. அதன்படி டீசர் மட்டுமே, வெளியாகி இருக்கும் நிலையில் ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம்
இந்த ஸ்மார்ட்போனானது ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவுஇருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி சென்சார் கேமரா
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

3ஜிபி/4ஜிபி ரேம்
இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, சாம்பல், பசுமை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

5020எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை
ப்ளூடூத் 5, என்எப்சி, வைஃபை 802.11இயூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனங்களின் விலை மதிப்பு(இந்திய மதிப்பில்) 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.14,940-ஆக இருக்கலாம் எனவும் 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.18,690-ஆகவும் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications