இந்தியாவில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு.! முழு விவரம்.!
சியோமி நிறுவனம் அண்மையில் ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன் செய்ததை தொடர்ந்து ரெட்மி 9 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலைகுறைப்பு அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் அசத்தலான கேமரா மற்றும் சிறந்த மென்பொருள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மி நோட் 9
gadgetsnow தளத்தில் வெளிவந்த தகவலின்படி, 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.10,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 மாடலுக்கு ரூ.500 விலைகுறைக்கப்பட்டுரூ.13,499-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 மாடலுக்கு ரு.1000 விலைகுறைக்கப்பட்டு ரூ.13,999-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2340 பிக்சல்தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன்வெளிவந்துள்ளது

மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர்
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவுஇருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி சென்சார்
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5020எம்ஏஎச் பேட்டரி
ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ப்ளூடூத் 5.0, என்எப்சி, வைஃபை 802.11,யூ.எஸ்.பி டைப்-சி, 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications