Home
Mobile

இன்று: முதல் முறையாக விற்பனைக்கு வரும் ரெட்மி நோட் 9.! விலை மற்றும் விபரங்கள்.!

அன்மையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த சாதனம் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் அமேசான் மற்றும் மி.காம் வலைதளங்களில் சரியாக 12மணி அளவில் இந்த ரெட்மி நோட் 9 சாதனம் விற்பனைக்கு வருகிறது.

1080 x2340 பிக்சல்

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2340 பிக்சல்
திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன்வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவுஇருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

மார்ட்போனின் பின்புறம்

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ர்ட்போனில் 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, சாம்பல், பசுமை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

 5020எம்ஏஎச் பேட்டரி

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 22.5வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. ப்ளூடூத் 5.0, என்எப்சி, வைஃபை 802.11,யூ.எஸ்.பி டைப்-சி,
3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அட்டகாசமான விலை

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.11,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,499-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் விலை ரூ.14,499-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 9 First Sale Today In India Via Amazon: Price, Offers And More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X