Redmi நோட் 9 போனின் விற்பனை தேதி மாற்றம்! ஆர்டர் செய்வதற்கு முன் உடனே தெரிஞ்சுகொங்க!
சியோமி நிறுவனத்தின் ரெட்மி பிராண்ட் தனது புதிய வரவான ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் இன்று அறிமுகம் செய்யுமென்று கடந்த வாரம் அறிவித்திருந்தது. ஆனால், தற்பொழுது இந்த அறிமுக தேதி இந்த வாரத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வாரத்தில் எப்பொழுது இந்த மிரட்டலான புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் ஆனது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என ரெட்மி நிறுவனம் சார்பில தெரிவிக்கப்பட்டது. ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதை உணர்த்தும் வகையில் சமீபத்தில் டீசரை நிறுவனம் வெளியிட்டது.

கடந்த வரம் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஜூலை 20ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது நிறுவனம் இந்த அறிமுக தேதியில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. புதிய ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அமேசான் தளம் மற்றும் ரெட்மி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் வழியாக வரும் ஜூலை 24ம் தேதி விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் மாடல் 6.53' இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி, கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 உடன் MIUI 11 ஆதரவிருப்பதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 13எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் பல ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.குறிப்பாக வெள்ளை, சாம்பல், பசுமை உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கும்.

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனில் 5020எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 18வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல், எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

இந்த சாதனங்களின் விலை மதிப்பு(இந்திய மதிப்பில்) 3ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.14,940-ஆக இருக்கலாம் எனவும் 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் விலை ரூ.18,690-ஆகவும் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications