நவம்பர் 26 ரெட்மி நோட் 9 5ஜி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!
ரெட்மி நோட் 9 தொடரை சியோமி நவம்பர் 26 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரெட்மி நோட் 9 தொடரில் இரண்டு 5ஜி பதிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 9 சீரிஸ்
ரெட்மி நோட் 9 சீரிஸை சியோமி நவம்பர் 26 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெளியீட்டு தேதியுடன் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு குறித்து சியோமி சில தகவல்களை தெரிவித்துள்ளது. புதிய ரெட்மி நோட் 9 மாடல்கள் குறித்த கசிவுகள் கடந்த இரண்டு வாரங்களாகவே தொடர்ந்து வெளியான வண்ணம் உள்ளது. சீனாவில் ரெட்மி 9 சீரிஸ் இரண்டு 5ஜி மாடல்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 4ஜி மாறுபாடு குறித்த தகவல்கள் எதுவும் தெரியவில்லை.

5ஜி வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்படும்
5ஜி வேரியண்ட்கள் புதிய டிசைன்களை கொண்டிருந்தாலும் இந்தியாவில் கிடைக்கும் ரெட்மி நோட் 9 ப்ரோ மாடல்களை போன்றே பொதுவானதாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கசிவு தகவல்களை ஆராய்ந்து பார்க்கையில் இது எம்ஐ10டி லைட் மாடலை அடிப்படையாக கொண்டிருப்பதாக தெரிகிறது. இந்த ஸ்மாரட்போனின் வெளியீட்டு தேதி மற்றும் வடிவமைப்பு குறித்து கூடுதல் விவரங்கள் கசிந்துள்ளன.

குவால்காம் மற்றும் மீடியா டெக் சிப்செட்
கசிந்த விவரங்கள் குறித்து பார்க்கையில் குவால்காம் மற்றும் மீடியா டெக்கின் சமீபத்திய சிப்செட்களின் பயன்பாடுகளோடு 5ஜி இணைப்பு கொண்ட இரண்டு மாடல்களும் சந்தையில் கிடைக்கும். ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி இந்த தொடரின் முன்னணி மாடலாக இருக்கும். இதில் ஸ்னாப்டிராகன் 750 ஜி சிப்செட் மற்றும் 8ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.67 இன்ச் முழு எச்டிப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வரும்.

பஞ்ச் ஹோல் கட்அவுட் அமைப்பு
இந்த ஸ்மார்ட்போன் பஞ்ச் ஹோல் கட்அவுட் அமைப்புடன் 16 எம்பி கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4820 எம்ஏஎச் பேட்டரி 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இருக்கும். இதில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் இருக்கும் என டீசர் வெளிப்படுத்துகிறது.

கேமரா அமைப்பு குறிப்பிடத்தகுந்த அம்சம்
ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி தொடரில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்றால் அதன் கேமரா அமைப்பு. ப்ரோ வேரியண்டில் முதன்மை கேமரா அமைப்பாக 108 மெகாபிக்சல் கேமரா இருக்கும் என வெளியான கசிவுகள் தெரிவிக்கிறது. இடைநிலை ரக ஸ்மார்ட்போன்களில் அதிக மெகாபிக்சல் கொண்ட கேமராவாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என கூறப்படுகிறது.

ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ரெட்மி நோட் 9 5ஜி 6.53 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இதில் மீடியாடெக் டைமன்ஷன் 800 யூ சிப்செட் கொண்டிருக்கும் எனவும் 5000 எம்ஏஎச் பேட்டரி 22.5 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ரெட்மி நோட் 9 5ஜி 48 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் முன்புற கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
file images


Click it and Unblock the Notifications