ரெட்மி நோட் 9 5ஜி பதிப்பு விரைவில் அறிமுகம்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்!

|

ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோவின் 5ஜி பதிப்பை அறிமுகம் செய்ய நிறுவனம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரெட்மி நோட் 9 சீரிஸின் 5ஜி பதிப்பு நவம்பர் 24 ஆம் தேதி சந்தைக்கு வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ

ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ

ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ரெட்மி நோட் 9 சீரிஸ் 5ஜி பதிப்பு சீனாவில் நவம்பர் 24 ஆம் தேதி வரும் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெளியீட்டு விவரம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ்

ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ்

ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முழு மீடியா டெக் மற்றும் குவால்காம் செயலிகளை கொண்டிருக்கும் எனவும் இந்த தொடரில் ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஆகிய இரண்டு மாடல்கள் வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னணிரக ஸ்மார்ட்போன்களாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ரெட்மி நோட் 9 தொடர் விலை

ரெட்மி நோட் 9 தொடர் விலை

இந்தியாவில் ரெட்மி நோட் 9 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி வேரியண்ட் மாடல் ரூ.11,999 எனவும் ரெட்மி 9 ப்ரோ ரூ.12,999 எனவும் தொடங்குகிறது. அதேபோல் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ரூ.15,999 எனவும் விற்கப்படுகிறது.

ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ரெட்மி நோட் 9 5ஜி சீரிஸ்: எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி ஆகிய அம்சங்கள் குறித்த தகவல்கள் கடந்தவாரம் வெளியானது. இதில் ரெட்மி நோட் 9 5ஜி மாடல் எண் M2007J22C எனவும் 6.53 இன்ச் ஃபுல் எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் டிஸ்ப்ளேவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. மீடியாடெக் டைமன்ஷன் 800யூ செயலியுடன் 8ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதோடு 48 எம்பி முதன்மை கேமராவோடு டிரிபிள் ரியர் கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

நோட் 9 ப்ரோ 5ஜி அம்சங்கள்

நோட் 9 ப்ரோ 5ஜி அம்சங்கள்

நோட் 9 ப்ரோ 5ஜி முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 ஜி செயலி கொண்டிருக்கும். அதோடு 12 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு வசதி மற்றும் 108 எம்பி முதன்மை ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Note 9 5G May Launching on November 24: Expected Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X