Home
Mobile

சத்தமின்றி ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவமான ரெட்மி சத்தமின்றி புதிய ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் மாடலை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த சாதனம் விரைவில் இந்த சாதனம் கூடிய விரைவில் அனைத்து சந்தைகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரெட்மி நோட் 8டி சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே வசதி

டிஸ்பிளே வசதி

ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போன் ஆனது 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 x 2340பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக கேமிங்வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 19:5:9 என்ற திரைவிகித அடிப்படையில்
வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட் வசதி

சிப்செட் வசதி

இந்த ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் அட்ரினோ 610ஜிபியு வசதியும்உள்ளது. மேலும் ஆண்ட்ரய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சேமிப்பு வசதி

சேமிப்பு வசதி

இந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32/64/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்புகூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாம்பல், நீலம், வெள்ளைஎன மூன்று நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

கேமரா அமைப்பு

கேமரா அமைப்பு

ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் +2எம்பிடெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 13எம்பிசெல்பீ கேமரா, பனோரமா செல்பி மற்றும் ஃபேஸ் அன்லாக் மற்றும் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அம்சம்உள்ளிட்ட ஆதரவுகள் உடன் வெளிவந்துள்ளது ரெட்மி நோட் 8டி.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

ரெட்மி நோட் 8டி ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 18வாட் குவிக் சார்ஜ் 3.0 சார்ஜிங் வசதியும் உள்ளது,மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, ஜபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுள் உள்ளது.

அட்டகாசமான விலை

அட்டகாசமான விலை

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8டி விலை 179 யூரோ (இந்திய மதிப்பில ரூ.14,065)
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8டி விலை 199 யூரோ (இந்திய மதிப்பில ரூ.15,670)
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 8டி விலை 249 யூரோ (இந்திய மதிப்பில ரூ.19,565)

More from GizBot

Best Mobiles in India

English summary
Redmi Note 8T Launched: Price in India, Sale Date, Specs and other details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X