மிரட்டலான 64MP கேமராவுடன் களமிறங்கும் ரெட்மி நோட் 8 ப்ரோ தகவல்கள்!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான redmi நிறுவனம் தனது புதிய 64 மெகா பிக்சல் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யப் போவதாக அண்மையில் அறிவித்திருந்தது. இந்த புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் Q4 என்ற சியோமி நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 8 ப்ரோ
Redmi நிறுவனம் அறிமுகம் செய்யப் போகும் இந்த புதிய 64 மெகா பிக்சல் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல் சியோமி ரெட்மி நோட் 8 மற்றும் சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் இருக்கிறதா?
இதை உறுதிப்படுத்தும் விதமாகச் சீன வலைத்தளமான weibo தளத்தில், ரெட்மி நிறுவனம் தனது புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ வின் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் சேவை வழங்கப்படுமா என்ற ரசிகர்களின் கேள்விக்கும் பதில் கிடைத்துள்ளது.

இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் சேவைக்கான பதில்
இந்த போஸ்டரில் இருக்கும் தகவலின்படி புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் மற்றும் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன், ட்ரிபிள் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும் என்று உறுதியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த புதிய ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் சேவை இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அறிமுக தேதி
ரெட்மி நிறுவனத்தின் இந்த புதிய ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் வருகின்ற ஆகஸ்ட் 29ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் தகவல்கள் வரும் வியாழன் அன்று அதிகாரப்பூர்வமாக வலைத்தளங்களில் வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications