சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ: விலை என்ன? லைவா இங்கே பார்க்கலாம்!
சியோமி நிறுவனம், இன்று நடைபெறவிருக்கும் அதன் நிகழ்ச்சியில் புதிய சியோமி ரெட்மி நோட் 8 மற்றும் சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களுடன் புதிய MIUI 11 இயங்குதளத்தையும் இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ
சியோமி நிறுவனத்தின் இந்த புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் முன்பே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சீன சந்தையில், சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன், ஹீலியோ G90T சிப்செட் பிராசஸர் உடன் 4,500 எம்.ஏ.எச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

64 மெகா பிக்சல் கேமரா
புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன், 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன், குவாட் கேமரா செட்டப் அம்சத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
நேரலை பார்க்க
சியோமி நிறுவனத்தின் இந்த நிகழ்ச்சி இன்று மதியம் 12 மணிக்கு நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் புதிய சியோமி ரெட்மி நோட் 8 மற்றும் சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த நிகழ்ச்சி யூடியூப் இல் நேரலையாகப் பார்க்க விரும்புவோர் இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

விற்பனை
சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு சியோமி ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசான் தளம் மற்றும் ஸியோமியின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Mi.com தளத்திலும் விற்பனைக்குக் கிடைக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications