ரெட்மி நோட் 8 ப்ரோ இன்று விற்பனை! ஸ்டாக் அவுட்டாவதற்குள் உடனே முந்துங்கள்!

|

சியோமி நிறுவனம் அண்மையில் தனது சியோமி ரெட்மி நோட் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட 3 மாத காலங்களிலேயே சுமார் 1 கோடிக்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்து சாதனை படைத்தது. தற்பொழுது சியோமி நிறுவனம் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான விற்பனையை இன்று துவங்குகிறது.

ரெட்மி நோட் 8 ப்ரோ விற்பனை

ரெட்மி நோட் 8 ப்ரோ விற்பனை

சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று மதியம் 12 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கிறது. ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அமேசான், மி.காம் (mi.com) மற்றும் சியோமி மி ஹோம் ஸ்டோர்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாட் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி நோட் 8 ப்ரோ

குவாட் ரியர் கேமரா அமைப்புடன் ரெட்மி நோட் 8 ப்ரோ

சியோமி நிறுவனத்தின் இந்த ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபர் மாதம் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் மாடலுடன் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 8 ப்ரோவின் முக்கிய சிறப்பம்சங்கள் அதன் குவாட் ரியர் கேமரா அமைப்பு, முழு எச்டி + டிஸ்ப்ளே மற்றும் கிரேடியன்ட் பேக் டிசைன் அம்சமாகும்.

நீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்நீங்க ரொம்ப லேட்: விக்ரம் லேண்டரை முன்பே கண்டுபிடித்துவிட்டோம்- இஸ்ரோ சிவன் தகவல்

பட்ஜெட் விலையில் மிரட்டலான ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலையில் மிரட்டலான ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலையில் குவாட் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அட்டகாசமான ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் இன்று விற்பனைக்குக் கிடைக்கிறது. இதற்கு முன்பு நடத்தப்பட்ட ரெட்மி நோட் 8 விற்பனையில், விற்பனை துவங்கிய சில நேரத்திலேயே அனைத்து யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டு அவுட் ஆஃப் ஸ்டாக் சென்ற காரணத்தினால், ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கும் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மி நோட் 8 ப்ரோ விலை என்ன?

ரெட்மி நோட் 8 ப்ரோ விலை என்ன?

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6ஜிபி ரேம்/ 64ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ.14,999 என்ற விலையிலும், இதன் 6ஜிபி ரேம்/ 128ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ.15,999 என்ற விலையிலும் மற்றும் இதன் 8ஜிபி ரேம்/ 128ஜிபி வேரியண்ட் மாடல் வெறும் ரூ.17,999 என்ற விலையிலும் விற்பனைக்கு இன்று மதியம் 12 மணி முதல் அமேசான், மி.காம் (mi.com) மற்றும் சியோமி மி ஹோம் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

டிசம்பர் 6 முதல் அனைத்து டிசம்பர் 6 முதல் அனைத்து "ஜியோ கட்டணமும் உயர்வு": எவ்வளவு தெரியுமா?

ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்பம்சம்

 • 6.53' இன்ச் முழு எச்.டி பிளஸ் எச்.டி.ஆர் டிஸ்பிளே
 • MIUI 10 இயங்குதளத்துடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 பை
 • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G90T பிராசஸர்
 • 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் / 64ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்
 • குவாட் கேமரா அமைப்பு
 • 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
 • 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா
 • 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
 • 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார்
 • 20 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
 • 4 ஜி வோல்டிஇ
 • வைஃபை
 • புளூடூத்
 • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
 • யூ.எஸ்.பி டைப்-சி
 • 3.5 மிமீ ஆடியோ ஜாக்
 • 18W ஃபாஸ்ட் சார்ஜிங்
 • 4,500 எம்ஏஎச் பேட்டரி
 • நிறம்: காமா கிறீன், ஹாலோ வைட், ஷாடோ பிளாக் மற்றும் எலக்ட்ரிக் ப்ளூ

Most Read Articles
Best Mobiles in India

English summary
Redmi Note 8 Pro For Sale Today! Immediately Get It Before The Stock Is Out : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X