ரெட்மி நோட் 8 உங்க கிட்ட இருக்கா? அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான்.!
சியோமி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சியோமி நிறுவனம் அதன் ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ் அடிப்படையிலான MIUI 12 ஸ்டாண்டர்ட் அப்டேட்டை வழங்கியுள்ளது.

மேலும் குறிப்பிட்ட அப்டேட்டை பெற்ற பயன்கள் அது சார்ந்த ஸ்கரின் ஷாட்களை ட்விட்டர் வழியாக பகிர்ந்துள்ளனர். குறிப்பாக இந்த அப்டேட் புதிய புதிய அனிமேஷன்கள் மற்றும் புதிய அம்சங்களைக் கொண்டுவருகிறது. அதேபோல் 2020 தேதியிட்ட ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி பேட்சையும் கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்பட்ட இந்த அப்டேட் ஆனது MIUI 12.0.1.0.QCOINXM என்கிற பில்ட் நம்பருடன் வருகிறது. ட்விட்டர் பயனர்கள் பகிர்ந்துள்ள ஸ்கிரீன் ஷாட்கள் இந்த அப்டேட்டின் அளவு 2 ஜிபி என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே ஒரு நல்ல வைஃபை இணைப்பின் கீழ் இந்த அப்டேட்டை நிறுவும்படி பரிந்துரைக்கிறோம். மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

இந்தி புதிய அப்டேட்டை பதிவிறக்கி நிறுவத் தொடங்குவதற்கு முன்பு, உங்களது பேட்டரி போதுமான அளவு சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா அல்லது உங்கள் ஸ்மார்ட்போன் அளவு சார்ஜ் செய்யப்பட்டுள்ளதா அல்லது உங்கள் சார்ஜ் செய்யப்படுகிறதா என்பதையும் உறுதிப்படுத்தவும்.
ஒருவேளை ரெட்மி நோட் 8 பயனர்களுக்கு இது குறித்த தகவல் கிடைக்கவில்லை என்றால் கவலை வேண்டாம், உங்களது ஸ்மார்ட்போனின் செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று கைமுறையாக அப்டேட்டை சரிபார்க்க வேண்டும். ஏனெனில் இந்தியாவில் உள்ள அனைத்து ரெட்மி நோட் 8 யூனிட்களுக்கும் இந்த அப்டேட் வந்து சேர சிறிது காலம் ஆகலாம்.

MIUI 12 அப்டேட் ஆனது மறுசீரமைக்கப்பட்ட சிஸ்டம் வைட் அனிமேஷன்கள் மற்றும் விஷூவலைசேஷன்களுடன் வருகிறது. பின்பு இது டார்க் மோட் அம்சம் ஒரு சிஸ்டம் வைட் அம்சமாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

சியோமி ரெட்மி நோட் 8 சிறப்பம்சம்
6.3' இன்ச் கொண்ட வாட்டர் நாட்ச் டிஸ்பிளே
ஸ்னாப்டிராகன் 665 சிப்செட்
4ஜிபி ரேம் 64ஜிபி / 6ஜிபி ரேம் 128ஜிபி
குவாட் கேமரா செட்டப்
48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா
8 மெகா பிக்சல் கொண்ட வைடு ஆங்கிள் லென்ஸ் கேமரா
2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா
2 டெப்த் சென்சார்
13 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க செல்ஃபி கேமரா
4,000 எம்.ஏ.எச் பேட்டரி


Click it and Unblock the Notifications