இந்தியா: 48எம்பி கேமராவுடன் ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை கம்மி தான்!
இந்த ரெட்மி நோட் 7எஸ் சாதனம் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 48எம்பி ரியர் கேமரா, டாட் நாட்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் சிப்செட் என பல்வேறு சூப்பர்
அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் குறைவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பின்பு ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடல் வரும் மே 23-ம் தேதி பிளிப்கார்ட், மி.காம், மி ஹோம் போன்ற தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு, நீலம், சிவப்பு போன்ற நிறங்களில்
இந்த தரமான ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஸ்பிளே:
ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080x2340 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியுடன்
வெளிவந்துள்ளது.

சிப்செட்:
இக்கருவி ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660எஸ்ஒசி சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:
இந்த ரெட்மி நோட் 7எஸ் சாதனம் 3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
ரெட்மி நோட் 7எஸ் சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் 10 5எம்பி செகன்டரி சென்சார் என இரண்டு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. பின்பு 13எம்பி செல்பீ கேமரா, ஏஐ-ஆதரவு, எல்இடி பிளாஸ், ஃபேஸ்அன்லாக போன்ற பல்வேறு ஆதரவுகள் உண்டு.

பேட்டரி:
ரெட்மி நோட் 7எஸ் ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி வைஃபை, யுஎஸ்பி டைப்-சி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற
பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் சாதனத்தின் விலை ரூ.10,999-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7எஸ் சாதனத்தின் விலை ரூ.12,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications