Home
Mobile

பிப்ரவரி: 48எம்பி கேமராவுடன் களமிறங்கும் சியோமி ரெட்மி நோட் 7: விலை எவ்வளவு தெரியுமா?

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா அமைப்புகள் இடம்பெற்றுள்ளது.

இந்திய சந்தையில் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் முழு விவரங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவல்களை அந்நிறுவனம் சார்பாக ஆனைலின் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா மற்றும் கைரேகை ஸ்கேனர், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது
சியோமி நிறுவனம், எனவே இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்படும் என சியோமி இந்திய துணை தலைவர் மனு குமார் ஜெயின் அவர்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 சியோமி ரெட்மி நோட் 7:

சியோமி ரெட்மி நோட் 7:

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடல் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் 2340x1080 பிக்சல் திர்மானம் அடிப்படையாக கொண்டுள்ளது. பின்பு கார்னிங் கொரில்லா கிளாஷ் 5 மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 660:

ஸ்னாப்டிராகன் 660:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 ஆக்டோ-கோர் சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, நீலம், தங்கம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

கேமரா:

கேமரா:

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 48எம்பி+5எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 13எம்பி செல்பீ கேமரா அமைப்புகள் இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் அடக்கம்.

பேட்டரி:

பேட்டரி:

சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 4000எம்ஏஎச் பேட்டரி அமைப்பை கொண்டுள்ளது, பின்பு குவிக் சார்ஜ் 4ஆதரவு,யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத், வைஃபை போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விலை:

விலை:

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை ரூ.10,500-ஆக உள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை ரூ.12,500-ஆக உள்ளது.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 விலை ரூ.14,500-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 7 With 48 Megapixel Camera to Launch in India Soon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X