Home
Mobile

அட்டகாசமான புதிய நிறத்தில் களமிறங்கும் ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்!

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் நெபுலா ரெட், நெப்டியூன் ப்ளூ மற்றும் ஸ்பேஸ் பிளாக் ஆகிய மூன்று வண்ண வகைகளில் இந்தியச் சந்தையில் கிடைக்கிறது. சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெயிபோ பக்கத்தில் புதிய வண்ண வேரியண்ட் போஸ்டர் ஒன்றை சியோமி வெளியிட்டுள்ளது.

புதிய ரெட்மி நோட் 7 சீரிஸ்

புதிய ரெட்மி நோட் 7 சீரிஸ்

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள விளம்பரத்தின்படி அடுத்தபடியாக ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் புதிய வெள்ளை நிறத்தில் அறிமுகம் செய்யப்படும் என்பது தெளிவாகத் தெரிகிறது. சியோமி அறிமுகம் செய்யும் இந்த புதிய வெள்ளை நிற வேரியண்ட், சாதாரண வெள்ளை நிறமாக இல்லாமல் இது புது வகை வெள்ளை நிற வேரியண்ட் ஆகா இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆடம்பரமான வெள்ளை நிற வேரியண்ட்

ஆடம்பரமான வெள்ளை நிற வேரியண்ட்

புதிய வெள்ளை நிற வேரியண்ட் பேர்ல் ஒயிட், மார்பிள் ஒயிட் அல்லது போலார் ஒயிட் போன்ற ஏதேனும் ஒரு பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமியின் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெள்ளை நிற வேரியண்ட் பார்ப்பதற்கு மிகவும் ஆடம்பரமாக இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

TENAA பட்டியலில் ரெட்மி நோட் 7 ஒயிட்

TENAA பட்டியலில் ரெட்மி நோட் 7 ஒயிட்

சியோமி ரெட்மி நோட் 7 மற்றும் சியோமி ரெட்மி நோட் 7 ப்ரோ ஆகிய இரண்டு மாடல்களும் இந்த புதிய வெள்ளை நிற வேரியண்ட்டை பெரும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் TENAA பட்டியலில் ரெட்மி நோட் 7 சீரிஸ் வெள்ளை நிற வேரியண்ட் வெளியிடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

15 மில்லியன் யூனிட் விற்பனை

15 மில்லியன் யூனிட் விற்பனை

சியோமி ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன், தனது விற்பனையைத் துவங்கிய நேரத்திலிருந்து சுமார் 15 மில்லியன் யூனிட்களை தற்பொழுது வரை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட்ஜெட் விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போனிற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

வெகு விரைவில் விற்பனைக்கு

வெகு விரைவில் விற்பனைக்கு

மேலும் தற்பொழுது சியோமி நிறுவனம் புதிய வண்ண மாறுபாட்டை அறிவித்துள்ளது, இதனால் நிச்சயம் சியோமி ரெட்மி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இன்னும் அதிகரிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. இந்த புதிய வெள்ளை நிற வேரியண்ட் வெகு விரைவில் விற்பனைக்கு வரும் என்று சியோமி அறிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 7 series coming with new color variant official tease : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X