அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் விலை என்ன தெரியுமா?
சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் அடுத்த அறிமுகமான சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது.
சியோமியின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனத்தின் அடுத்த அறிமுகமான சியோமி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் மாடலை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது.

ரெட்மி நோட் 7
அடுத்த வாரத்தில் எந்த நாள் ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி நோட் 7 அறிமுகம் செய்யப்படுமென்ற உறுதியான தகவலை மட்டும் இன்னும் ரெட்மி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. ஆனால் ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் என்ன விலையில் வெளியிடப்படும் என்ற ஒரு தகவல் மட்டும் தற்பொழுது வெளியாகியுள்ளது.

விலை
ரெட்மி ரசிகர்களின் கேள்விக்குப் பதிலாக வெயிபிங் வெளியிட்டுள்ள வெய்போ பதிவின்படி ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் சுமார் ரூ.21,200 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்
இருப்பினும் இந்த விலையில் தான் நிச்சயம் ரெட்மி நோட் 7 அறிமுகம் செய்யப்படுமென்பதில்லை, எதிர்பார்க்கக் கூடிய விலையாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன் சிறப்பம்சம்
ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன், ஸ்னாப் டிராகன் 660 சிப்செட்டிற்கு பதிலாக ஸ்னாப் டிராகன் 675 உடன் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு உடன் கூடிய 48 மெகா பிக்சல் கொண்ட கேமரா சேவையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 4000 எம்.ஏ.எச் பேட்டரியுடன், ஆண்ட்ராய்டு பை 9 இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்படும் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications