சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுகம் : நேரலையில் காணலாம்.!

சியோமி பிரியர்கள் அதிகம் ஏதிர்பார்த்து காத்திருந்த சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் அறிமுகம் விழா இன்று நடைபெறவுள்ளது.

|

சியோமி பிரியர்கள் அதிகம் ஏதிர்பார்த்து காத்திருந்த சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் அறிமுகம் விழா இன்று நடைபெறவுள்ளது.

சியோமி நிறுவனம் தனக்கென்று ஒரு தனி இடத்தை இந்திய சந்தையில் பிடித்ததை தொடர்ந்து, சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் மாடலை இன்று மதியம் 12 மணிக்கு அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ நேரலை

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ நேரலை

இந்த அறிமுக நிகழ்ச்சியில் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் வேரியண்ட் மற்றும் விலை விபரங்கள் நேரலையில் ஒளிபரப்பப்படுமென்றும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் சியோமி இன் அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் இந்நிகழ்ச்சியின் நேரலையை சியோமி ரசிகர்கள் காணலாம்.

பி2i வாட்டர் ரெபெளண்ட் தொழில்நுட்பம்

பி2i வாட்டர் ரெபெளண்ட் தொழில்நுட்பம்

புதிய சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் 19:9 என்ற பெரிய டிஸ்பிளேயுடன் கூடிய டூயல் பிரண்ட் கேமரா செட்டப்புடன் களமிறங்குகிறது. இத்துடன் கூடுதல் சிறப்பம்சமாக பி2i என்ற வாட்டர் ரெபெளண்ட் தொழில்நுட்பமும் முதல் முறையாக ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் இல் அறிமுகம் செய்யப்படுகிறது.

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட்

6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி வேரியண்ட்

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட் போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு வேரியண்ட் உடன் கூடிய MIUI 10 இயங்குதளத்துடன் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ நாளை முதல் பிளிப்கார்ட் மற்றும் சியோமி வலைத்தளத்தில் தனது விற்பனையைத் துவங்குகிறது. சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ வின் துவக்க வேரியண்ட் ஸ்மார்ட் போன் ரூ.15,300 க்கு விற்பனைக்கு வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விபரக்குறிப்பு:

சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விபரக்குறிப்பு:

- 6.26' இன்ச் கொண்ட 2280 x 1080 பிக்சல் உடைய 19:9 விகித முழு எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே
- 20 மெகா பிக்சல் உடன் கூடிய 2 மெகா பிக்சல் கொண்ட டூயல் செல்பீ ஏ.ஐ கேமரா
- 12 மெகா பிக்சல் உடன் கூடிய 5 மெகா பிக்சல் கொண்ட டூயல் ரியர் பின்பக்க கேமரா
- குவால்காம் ஸ்னாப்டிராகன் ஆக்டா கோர் 636 ப்ராசஸர்
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்துடன் கூடிய MIUI 10 இயங்குதளம்
- 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் (எதிர்பார்க்கப்படுகிறது)
- வைஃபை
- ப்ளூடூத்
- யுஎஸ்பி டைப்-சி
- என்.எப்.சி
- ஜி.பி.எஸ்
- 4000 எம்.ஏ.எச் பேட்டரி

துவக்க விலை: ரூ.15,300

Best Mobiles in India

English summary
Redmi Note 6 Pro India Launch Set for Today How to Watch Live Stream : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X