Home
Mobile

ரூ.9,999/- முதல் இன்று 12 மணிக்கு ரெட்மீ நோட் 5 & நோட் 5 ப்ரோ விற்பனை.!

இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட் மற்றும் அல்லது மி.காம் வழியாக விற்பனையாகவுள்ளது

By Muthuraj

சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 5 மற்றும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆகிய இரு ஸ்மார்ட்போன்களும், இன்று மீண்டும் இந்தியாவில் விற்பனையாகவுள்ளன. இதே கருவிகளின் முதல் பிளாஷ் விற்பனை நடைபெற்ற நான்கு நாட்களுக்குள் இரண்டாவது பிளாஷ் சேல் நடைபெறுவது வாடிக்கையாளர்களை குஷியாக்கியுள்ளது.

இன்று (புதன்கிழமை) மதியம் 12 மணிக்கு, பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான ப்ளிப்கார்ட் மற்றும் அல்லது மி.காம் வழியாக விற்பனையாகவுள்ளது, நேற்று விற்பனைக்கு வந்த ரெட்மீ 5 போன்று சுமார் 4 லட்சம் யூனிட்களை இந்த விறபனையில் எதிர்பார்த்திட வேண்டாம், இரண்டு மாதிரிகளிலும் குறித்த யூனிட்களே விற்பனைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மீ நோட் 5 (விலை, ரேம், சேமிப்பு)

ரெட்மீ நோட் 5 (விலை, ரேம், சேமிப்பு)

விலை மற்றும் வண்ண மாறுபாடுகளை பொறுத்தமட்டில், சியோமி ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் + , 32 ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ.9,999/-க்கும், 4 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ.11,999'-க்கும் வாங்க கிடைக்கும். இக்கருவி பிளாக், கோல்ட், ஏலேக் ப்ளூ, மற்றும் ரோஸ் கோல்ட் உள்ளிட்ட பல்வேறு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மீ நோட் 5 ப்ரோ (விலை, ரேம், சேமிப்பு)

ரெட்மீ நோட் 5 ப்ரோ (விலை, ரேம், சேமிப்பு)

மறுகையில் உள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ.13,999/-க்கும் மற்றும் 6 ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு மாறுபாடு ரூ.16.999/-க்கும் வாங்க கிடைக்கும். இக்கருவியம் பிளாக், கோல்ட், ஏலேக் ப்ளூ, மற்றும் ரோஸ் கோல்ட் உள்ளிட்ட பல்வேறு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது.

ரெட்மீ நோட் 5 அம்சங்கள்

ரெட்மீ நோட் 5 அம்சங்கள்

சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது அதன் முன்னணி மேல் மற்றும் கீழ் பகுதிகளில் சிறிய அளவிலான பெஸல்களை கொண்டுள்ளது. அது ஒரு 5.99 அங்குல முழு எச்டி + டிஸ்பிளேவை வழங்குகிறது. மேலும் இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 620 சிப்செட் உடனானன் 3 ஜிபி / 4ஜிபி ரேம் முறையில் 32 ஜிபி / 64 ஜிபி உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயக்கப்படுகிறது.

பின்புற கேமரா

பின்புற கேமரா

இந்த சாதனத்தின் கிராபிக்ஸ் பணிகளை அதன் அட்ரெனோ 506 ஜிபியூ கவனித்து கொள்கிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில் எப்/ 2.2 துளை மற்றும் 1.25 லென்ஸ் கொண்ட 12எம்பி பின்புற கேமரா கொண்டுள்ளது. மேலும் பின்புற கேமராவானது பிடிஏஎப் மற்றும் டூயல் டோன் எல்இடி ஃப்ளாஷ் ஆகியவற்றுக்கான ஆதரவும் கொண்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவுடன் கூடிய ஒரு 5எம்பி செல்பீ கேமரா உள்ளது இதன் இரண்டு கேமராக்களுமே1080பி வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. கைரேகை ஸ்கேனர் ஆனது பின்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது மற்றும் இந்த ஒட்டுமொத்த தொகுப்பும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. இறுதியாக இந்த தொலைபேசியானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான மியூஐ 9 கொண்டு இயங்குகிறது.

ரெட்மீ நோட் 5 ப்ரோ அம்சங்கள்

ரெட்மீ நோட் 5 ப்ரோ அம்சங்கள்

'இந்தியாவின் கேமரா பீஸ்ட்' என்று நிறுவனத்தின் மூலம் அழைக்கப்படும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது இரட்டை கேமரா அமைப்பை வழங்குகிறது. இது ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்ப்பையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக, அதன் பின்புற கேமரா தொகுதி அப்படியே ஐபோன் எக்ஸ் போன்றே உள்ளது.

12எம்பி +  5எம்பி

12எம்பி + 5எம்பி

கேமராத்துறையை பொறுத்தமட்டில், ஒரு 12எம்பி முதன்மை சென்சார் உடனான ஒரு 5எம்பி இரண்டாம் நிலை சென்சார் இணைந்திருக்கிறது. இது ஆழமான தகவல்களை சேர்க்கிறது. முன்பக்கம் ஒரு 20எம்பி செல்பீ கேமாராவை கொண்டுள்ளது. இரண்டு கேமராக்களுமே எல்இடி ஃப்ளாஷ் ஆதரவைக் கொண்டு வருகின்றன.

ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட்

ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட்

வரும் மார்ச் முதல் மியூஐ 9 ஒடிஏ மேம்படுத்தல் வழியாக பேஸ் அன்லாக் அம்சம் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியானது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி சிப்செட் கொண்டுள்ளது. சிறப்பம்சமாக 636 எஸ்ஓசி கொண்டு தொடங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

How to find vehicle owner detail (GIZBOT TAMIL)
ஆண்ட்ராய்டு நௌவ்கட்

ஆண்ட்ராய்டு நௌவ்கட்

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு மற்றும் ஒரு 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி என்கிற மூன்று சேமிப்பு மாதிரிகளில் கிடைக்கும் இக்கருவி அதே மியூஐ 9 உடனான ஆண்ட்ராய்டு நௌவ்கட் அடிப்படையில் மற்றும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயங்கும்.

Best Mobiles in India

English summary
Redmi Note 5, Redmi Note 5 pro Flash Sale at 12pm Today on Flipkart, Mi.com. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X