இந்தியாவின் கேமரா அரக்கன் என்ற பெயரில் வெளியாகும் ரெட்மீ 5 ப்ரோ; குட்பை ஐபோன் எக்ஸ்.!

|

ஏற்கனவே இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் மிட்-ரேன்ஞ் மற்றும் பட்ஜெட் பிரிவை ஆளும் சியோமி நிறுவனமானது இந்த 2018-ஆம் ஆண்டில் மிகப்பெரிய திட்டங்களை கொண்டுள்ளதுபோல் தெரிகிறது.

சின்ன சின்ன ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களிடம் போட்டி போட்டு வந்த சியோமி நிறுவனமானது - "நடிச்சா ஹீரோ தான்" என்பது போல - இனி பெரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. ஆம், சீன நிறுவனமான சியோமி, நேரடியாக ஆப்பிள் நிறுவனத்திடம் மோதல் நிகழ்த்தவுள்ளது. அதை சமீபத்திய தகவலொன்று அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது.

சியோமி ரெட்மீ 5 ப்ரோ

சியோமி ரெட்மீ 5 ப்ரோ

சியோமி மற்றும் ப்ளிப்கார்ட் வெளியிட்டுள்ள பல்வேறு டீசர்களின்படி, சியோமி ரெட்மீ நோட் 5 ஆனது நாளை வெளியாகிறது. அதனை தொடர்ந்து சியோமி ரெட்மீ 5 ப்ரோ என்றவொரு கருவி தயாராவதும், அது ஆப்பிளின் ஐபோன்களை துவம்சம் செய்யும் என்பதை சமீபத்திய தகவல் வெளிப்படுத்தியுள்ளது.

யூனிமெட்டல் உடல் வடிவமைப்பு

யூனிமெட்டல் உடல் வடிவமைப்பு

வெளியான தகவலின்படி, கூறப்படும் ரெட்மீ நோட் 5 ப்ரோ ஆனது ஸ்னாப்டிராகன் 636 எஸ்ஓசி கொண்டு வெளியாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போனாக இருக்கும். உடன் இக்கருவி ஒரு யூனிமெட்டல் உடல் வடிவமைப்பை பெற்று, ஐபோன் எக்ஸ் போன்ற பின்புற கேமரா வடிவமைப்பை பெறும்.

12எம்பி + 5எம்பி

12எம்பி + 5எம்பி

அதாவது ஒரு 12எம்பி முதன்மை சென்சார் ஒரு 5எம்பி டெப்த் சென்சார் ஜோடியாக, ஒரு எல்இடி ப்ளாஷ் கொண்டு வெளியாகவுள்ளது. பெரும்பாலான வடிவமைப்பு கடந்த காலத்தில் வெளியிடப்பட்ட மற்ற சியோமி ஸ்மார்ட்போன்கள் போலவே இருந்தாலும் கூட ரெட்மே நோட் 5 ப்ரோ ஆனது நவநாகரீகமான 18: 9 டிஸ்பிளே கொண்டுள்ளது.

முன்பக்க கேமரா

முன்பக்க கேமரா

அளவீட்டில் 158.6 × 75.4 × 8.05 மிமீ மற்றும் 181 கிராம் எடையைக் கொண்டுள்ள ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமராவை பொறுத்தமட்டில் ஒரு எல்இடி ப்ளாஷ் உடனான ஒரு 20எம்பி சென்சார் கொண்டுள்ளது. இந்த சியோமி ரெட்மீ 5 ப்ரோ ஆனது "இந்தியாவின் கேமரா அரக்கன் (பீஸ்ட்)" என்று நிறுவனம் கூறுகிறது.

ரேம் வகை

ரேம் வகை

முன்னர் குறிப்பிட்டபடி இந்த சாதனம் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட் மூலம் இயக்கப்படும் மற்றும் 3 ஜிபி, 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் வகைகளில் வெளியாகும். உள்ளடக்க சேமிப்பை பொறுத்தமட்டில், 64ஜிபி ரேம் வரை ஆதரிக்கலாம். உடன் மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் ஆதரவும் இருக்கும்.

 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே

5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே

இரட்டை சிம் கார்டுகளை ஆதரிக்க்கும் ரெட்மீ நோட் 5 ப்ரோ அனைத்து ஒரு 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்ப்ளே கொண்டு 450 நிட்ஸ் அளவிலான அதிகபட்ச பிரகாசம் மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு ஆகியவைகளை வழங்குகிறது.

ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட மியூஐ 9

ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட மியூஐ 9

உடன் இந்த தொலைபேசி திரையானது நேவிகேஷன் பொத்தான்களையும், பின்புறத்தில் கைரேகை சென்சார் ஒன்றையும் கொண்டு வருகிறது. மற்றும் ஆண்ட்ராய்டு நௌவ்கட் அல்லது ஆண்ட்ராய்டு ஓரியோவை அடிப்படையாகக் கொண்ட மியூஐ 9 கொண்டு இருக்கும்.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த முழு தொகுப்பும் ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படும். துரதிர்ஷ்டவசமாக இந்த தொலைபேசி இன்னும் ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் கொண்டுதான் வருகிறது, அதாவது பாஸ்ட் சார்ஜ் ஆதரவு இல்லை என்று அர்த்தம்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
சியோமி ரெட்மீ 5

சியோமி ரெட்மீ 5

நிறுவனத்தின் அடுத்த சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் மற்றும் இந்தியாவின் அடுத்த பெஸ்ட் செல்லிங் ஸ்மார்ட்போன் ஆக திகழுமென எதிர்பார்க்கப்படும் சியோமி ரெட்மீ 5 -ஐ பொறுத்தமட்டில் 2ஜிபி ரேம் / 16ஜிபி சேமிப்பு, 3ஜிபி ரேம் / 32ஜிபி சேமிப்பு, மற்றும் 4 ஜிபிரேம் / 32ஜிபி சேமிப்பு ஆகிய மூன்று மாறுபாடுகளும் இந்தியாவில் அறிமுகமாகலாம்.

நிற வகைகள்

நிற வகைகள்

வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மீ 5 ஆனது கடந்த டிசம்பரில் - கருப்பு, தங்கம், லைட் ப்ளூ மற்றும் ரோஸ் கோல்ட் ஆகிய நிற வகைகளில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் அம்சங்கள்

ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ் அம்சங்கள்

ரெட்மீ 5 மற்றும் ரெட்மீ 5 ப்ளஸ்ஆகிய இரு கருவிகளும் டூயல் சிம் (நானோ) ஸ்மார்ட்போன்கள் ஆகும். மேலும் அவைகள் ஆண்ட்ராய்டு நௌவ்கட் உடனாக மியூஐ 9 கொண்டு இயங்குகின்றன.

திரை விகிதம் மற்றும் டிஸ்பிளே

திரை விகிதம் மற்றும் டிஸ்பிளே

ரெட்மீ 5 ஆனது 5.7 அங்குல எச்டி ப்ளஸ் (720x1440 பிக்சல்கள்) டிஸ்பிளேவை கொண்டுருக்க, அதே நேரத்தில் பெரிய மாறுபாடான ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது 5.99 அங்குல முழு எச்டி ப்ளஸ் (1080x2160 பிக்சல்கள்) மற்றும் ஒரு 18: 9 என்கிற திரை விகிதம் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மெமரி

மெமரி

ரெட்மீ 5 ஆனது முன்னணி க்வால்காம் ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது முன்னர் கூறியபடி, 2ஜிபி/ 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் கொண்டு முறையே 16ஜிபி / 32ஜிபி ஆகிய உள்ளடக்கிய சேமிப்பு கொண்டுள்ளது. மறுகையில் உள்ள ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது ஒரு ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் மாறுபாடுகள் கீழ் முறையே 32ஜிபி மற்றும் 64ஜிபி அளவிலான உள்ளடக்கிய சேமிப்புத்திறன்கள் கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

கேமராவை பொறுத்தமட்டில் இரண்டு தொலைபேசிகளுமே, எப்/ 2.2 துளை மற்றும் பிடிஏஎப் உடனான 12 மெகாபிக்சல் பின்புற சென்சார் மற்றும் மென்மையான பிளாஷ் கொண்ட ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமராவும் கொண்டுள்ளது. இரு கருவிகளுமே பின்புறம்-ஏற்றப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது மற்றும் இணைப்பு விருப்பங்களை பொறுத்தமட்டில் 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஜாக் மற்றும் மைக்ரோ-யுஎஸ்பி ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

மேலும் இந்த தொலைபேசிகளானது ஆம்பியண்ட் லைட் சென்சார், பராக்ஸிமிட்டி சென்சார், ஜியோர்ஸ்கோப், மற்றும் அக்செலரோமீட்டர் ஆகியவைகளையும் கொண்டுள்ளது. ரெட்மீ 5 ஆனது ஒரு 3300எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்க மறுகையில் உள்ள ரெட்மீ 5 ப்ளஸ் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது.

ரெட்மீ 5 விலை நிர்ணயம்

ரெட்மீ 5 விலை நிர்ணயம்

விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில் இக்கருவியின் 2 ஜிபி ரேம் மாறுபாடானது ரூ.8,100/-க்கும், இதன் 3ஜிபி ரேம் மாறுபாடானது சுமார் ரூ.9,100/-க்கும் மற்றும் 4ஜிபி மாறுபாடானது சுமார் ரூ.11,200/-க்கும் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரலாம்.

ரெட்மீ 5 ப்ளஸ் விலை நிர்ணயம்

ரெட்மீ 5 ப்ளஸ் விலை நிர்ணயம்

மறுகையில் உள்ள சியோமி ரெட்மீ 5 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயத்தை பொறுத்தமட்டில், அதன் 4ஜிபி ரேம் மாறுபாடுனது சுமார் ரூ.10,200/-க்கும், மற்றும் 4 ஜிபி ரேம் மாறுபாடானது கிட்டத்தட்ட ரூ.13,200/-க்கும் இந்திய சந்தையைஅடையலாம்.

துல்லியமான விலை விவரங்கள்

துல்லியமான விலை விவரங்கள்

இந்த இரு கருவிகளின் கிடைக்கும்தன்மை மற்றும் துல்லியமான விலை விவரங்கள் தற்போது தெரியவில்லை, அது தொடக்க நிகழ்வில் உறுதிப்படுத்தப்படுமென எதிர்பார்க்கலாம். அது சார்ந்த அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருக்கவும்.

ஏர்டெல் & ஜியோவினால் கூட வழங்க முடியாத நன்மைகள்.!

ஏர்டெல் & ஜியோவினால் கூட வழங்க முடியாத நன்மைகள்.!

சமீபத்தில் (கடந்த பிப்ரவரி 10-ஆம் தேதி) அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் அதன் ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு 'பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக் ஆஃபர் என்கிறவொரு திட்டத்தை அறிவித்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்தும் பிஎஸ்என்எல் பயனர்களுக்கு 50% வரை கேஷ்பேக் சலுகைகால கிடைத்த வண்ணம் உள்ளது. தற்போது மகா சிவராத்திரியை முன்னிட்டு பிஎஸ்என்எல் அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டமான 'மேக்ஸிமம்' வாய்ப்பை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது மற்றும் அது சுவாரசியமான நன்மைகளையும் கொண்டுள்ளது.

ஒரு வருடம் முழுவதும் நன்மை

ஒரு வருடம் முழுவதும் நன்மை

அறிமுகமாகியுள்ள புதிய ப்ரீபெய்ட் திட்டமானது ஒர் ஆண்டு திட்டமாகும் மற்றும் இதன் விலை ரூ.999/- ஆகும். ரீசார்ஜ் செய்த தேதி முதல் - இரண்டு தொகுப்புகளாக - ஒரு வருடம் முழுவதும் நன்மைகளை அளிக்கும் இந்த புதிய மேக்ஸிமம் திட்டமானது என்.இ ஜம்மு & காஷ்மீர் மற்றும் அசாம் தவிர அனைத்து வட்டாரங்களிலும் பொருந்தும்.

கடுமையாக போட்டி

கடுமையாக போட்டி

தற்காலத்தில் அனைத்து ஆப்ரேட்டர்களிடமும் இருந்து கிடைக்கும் நன்மைகளை போலவே, இந்த திட்டம் குரல் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் தரவு நன்மைகளை வழங்குகிறது. உடன் பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து வெளியாகியுள்ள இந்தத் திட்டம் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் நீண்டகால செல்லுபடியாகும் திட்டங்களுடன் கடுமையாக போட்டிபோடுகிறது.

வரம்பை தாண்டிய பின்னர் இணைய வேகம்

வரம்பை தாண்டிய பின்னர் இணைய வேகம்

உடன் நாளொன்றுக்கு 100 இலவச எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. டேட்டா நன்மையை பொறுத்தமட்டில், 1ஜிபி என்கிற வரம்பை தாண்டிய பின்னர் இணைய வேகம் 40கேபிபிஎஸ் ஆக குறையும்.அந்த வேகமானது வாட்ஸ்ஆப் செய்திகளை அனுப்பவும் பெறவும் போதுமானது.

ஆக வரம்பற்ற டேட்டா ஆக இந்த

ஆக வரம்பற்ற டேட்டா ஆக இந்த

திட்டமானது வரம்பற்ற தரவை வழங்குகிறது என்னது ஒரு நல்ல கூடுதல் விற்பனை புள்ளியாகும். மும்பை மற்றும் தில்லி பகுதிகளுக்கான குரல் அழைப்புகளுக்கு மட்டும் நிமிடத்திற்கு 60 பைசாக்கள் வசூலிக்கப்படும்.

அடுத்த 182 முதல் 365 நாட்களுக்கு

அடுத்த 182 முதல் 365 நாட்களுக்கு

மேலே குறிப்பிட்டுள்ள நன்மைகளானது ரீசார்ஜ் செய்யப்பட்ட முதல் நாளில் இருந்து, அதாவது 0 முதல் 181 நாட்களுக்கு முதல் தொகுப்பாக செல்லுபடியாகும். அடுத்த 182 முதல் 365 நாட்கள் வரையிலாக ஆன்-நெட் மற்றும் ஆப்-நெட் ஆகிய இருவகையான அழைப்புகளுக்கும் நிமிடத்திற்கு 60 பைசா என்று வசூலிக்கப்படும்.

ஏர்டெல்

ஏர்டெல்

தேசிய ரோமிங் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 உள்ளூர் மற்றும் எல்.டி.டி எஸ்எம்எஸ், 90 நாட்களுக்கு அனைத்து கைபேசிகளுக்கும் 60 ஜிபி அளவிலான தரவு ஆகிய நன்மைகளை ஏர்டெல் வழங்குகிறது. மறுகையில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ வரம்பற்ற ரோமிங் அழைப்புகளை எந்தவித வரம்பும் இல்லாமல் வழங்குகிறது.

 ஜியோ

ஜியோ

உடன் தினம் 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் 60 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. ஆனால் பிஎஸ்என்எல் நிறுவனமோ அதிகபட்சமக 180 நாட்களுக்கு 180 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. உடன் வரம்பற்ற அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளுடன் சேர்த்து மற்றொரு சிறந்த பகுதியாக குறிப்பிட்ட மூன்று வட்டங்களை தவிர்த்து நாடு முழுவதும் இந்த திட்டம் செல்லுபடியாகும்

பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக்

பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக்

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 'பிஎஸ்என்எல் - போன்பே கேஷ்பேக் ஆஃபரை பொறுத்தமட்டில் ரூ.250/-க்கும் குறைவான விலை மதிப்பு கொண்ட ரீசார்ஜ் திட்டங்களுக்கு அதிகபட்சமக இந்த போன்பே கேஷ்பேக் ஆஃபர் வாய்ப்பின் மூலம் ரூ.50/- கிடைக்கும். மற்றும் அதற்கு மேலான ரீசார்ஜ்களுக்கு ரூ.75/- கிடைக்குமென்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Redmi Note 5 Pro Will Be World’s First Snapdragon 636 SoC Smartphone, To Feature Apple iPhone X-Like Camera Module. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X