Home
Mobile

ஏப்ரல் 13: அசத்தலான ரெட்மீ நோட் 5 ப்ரோ முன்பதிவு துவக்கம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் வரும் ஏப்ரல் 13-ம் தேதி பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக ஏப்ரல் 13-ம் தேதி மதியம் 12-மணி வாக்கில் இந்த முன்பதிவு துவக்கம் என்று சியோமி சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

ஏப்ரல் 13: அசத்தலான ரெட்மீ நோட் 5 ப்ரோ முன்பதிவு துவக்கம்.!

மேலும் மி.காம் மற்றும் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த சியோமி ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யப்படும். அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் பொதுவாக 5.99-இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இக்கருவி வெளிவரும்.

ஏப்ரல் 13: அசத்தலான ரெட்மீ நோட் 5 ப்ரோ முன்பதிவு துவக்கம்.!

ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 636 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கேம் மற்றும் ஆப் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி + 5எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 20மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஏப்ரல் 13: அசத்தலான ரெட்மீ நோட் 5 ப்ரோ முன்பதிவு துவக்கம்.!

ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஜியோ சார்பாக ரூ.2200 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)

மேலும் 4ஜிபி ரேம் கொண்ட ரெட்மீ நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மதிப்பு ரூ.13,999-எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பினபு 6ஜிபி ரேம் கொண்ட இக்கருவியின் விலை மதிப்பு ரூ.16,999-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Redmi Note 5 Pro open for pre-orders on Mi com from April 13 Here are details; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X