டூயல் ரியர் கேம்; 18:9 காட்சி விகிதத்துடன் ஆன்லைனில் சிக்கிய ரெட்மீ நோட் 5.!
இதை உறுதி செய்யும்வண்ணம் சியோமி நிறுவனத்தின் தாயக வலைத்தளமான ஜேடி.காம் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை பட்டியலிட்டுள்ளது.
சியோமி நிறுவனம், அதன் மிகவும் பிரபலமான ரெட்மீ வரிசையின் கீழ் மற்றொரு சிறப்பான கருவி ஒன்றை மிக விரைவில் அறிமுகம் செய்யும் என்பது போல் தெரிகிறது.

ஆகச்சிறந்த வெற்றியை பெற்ற சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போனின் அடுத்தகட்ட மேம்பாடாக சியோமி ரெட்மீ நோட் 5 வெளியாகவுள்ளது. இதை உறுதி செய்யும்வண்ணம் சியோமி நிறுவனத்தின் தாயக வலைத்தளமான ஜேடி.காம் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனை பட்டியலிட்டுள்ளது.

எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே வடிவமைப்பு.!
இந்த பட்டியலில் எந்தவொரு தயாரிப்பு புகைப்படமும் சேர்க்கப்படவில்லை என்கிறபோதிலும் கூர் வரவிருக்கும் ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனிற்கான ஒரு ஒதுக்கீடே என்று கருதப்படுகிறது. எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே வடிவமைப்பு கொண்டிருக்குமென பட்டியலிடப்பட்டுள்ளது.

இரட்டை கேமரா அமைப்பு.!
ரெட்மீ நோட் 5 ஸ்மார்ட்போனின் இதர (எதிர்பார்க்கப்படும்) அம்சங்களை பொறுத்தமட்டில் இக்கருவி 18: 9 என்கிற திரை விகிதத்துடன் தொடங்க வாய்ப்பு உள்ளது. மேலும், கைபேசி பின்பக்க இரட்டை கேமரா அமைப்பு கொண்டு வர வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

4000எம்ஏஎச் பேட்டரி.!
ஸ்னாப்ட்ராகன் 660 அல்லது மீடியா டெக் ஹீலியோ பி25 எஸ்ஓசி கொண்டு இயங்குமென எதிர்பார்க்கப்படும் இக்கருவியின் கேமரா அம்சங்களை பொறுத்தமட்டில் 16 மெகாபிக்சல் ஜோடியாக 5 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார்கள் இடம்பெறலாம். செல்பீ கேமரா பற்றிய குறிப்புகள் இல்லை. ஒரு 4000எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படலாம்.

இரண்டு சேமிப்பு வகை.!
முன்னர் வெளியான டிஇஎன்ஏஏ (சீன சான்றிதழ் ஆணையம்) பட்டியலின்படி, ரெட்மீ நோட் 5 ஆனது 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்புடனான 5.99 அங்குல முழு எச்டி+ டிஸ்பிளே கொண்டுவருமென கூறுகிறது. மேலும் இது இரண்டு சேமிப்பு வகைகளில் துவங்க படலாம் என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது. அதாவது 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு.

ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட்.!
மியூஐ9 அப்டேட் கொண்டுருக்கும் ரெட்மீ நோட் 5 ஆனது ஆண்ட்ராய்டு 7.1.2 நௌவ்கட் அடிப்படையில் இயங்கலாம். அளவீட்டில், 158.5x75.4x8 மிமீ மற்றும் 180 கிராம் எடையும் கொண்டிருக்கலாம். நினைவு கூறும் வண்ணம், சியோமி அதன் ரெட்மீ 5 தொடரின், சியோமி ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போனை தான் முதலில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications